90 வயதில் தனது அம்மாவை சினிமாவில் அறிமுகம் செய்யும் பாலிவுட் ஸ்டார்.. அம்மா சொன்ன ஷாக் விஷயம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  90 வயதில் தனது அம்மாவை சினிமாவில் அறிமுகம் செய்யும் பாலிவுட் ஸ்டார்.. அம்மா சொன்ன ஷாக் விஷயம்!

90 வயதில் தனது அம்மாவை சினிமாவில் அறிமுகம் செய்யும் பாலிவுட் ஸ்டார்.. அம்மா சொன்ன ஷாக் விஷயம்!

Malavica Natarajan HT Tamil
Published Jun 07, 2025 04:13 PM IST

சித்தாரே ஜாமீன் பர் படத்தில், தன் அம்மாவை நடிக்க வைத்துள்ளார் நடிகர் ஆமிர் கான். இதுகுறித்து நடந்த சுவாரசிய தகவல்களை அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

90 வயதில் தனது அம்மாவை சினிமாவில் அறிமுகம் செய்யும் பாலிவுட் ஸ்டார்.. அம்மா சொன்ன ஷாக் விஷயம்!
90 வயதில் தனது அம்மாவை சினிமாவில் அறிமுகம் செய்யும் பாலிவுட் ஸ்டார்.. அம்மா சொன்ன ஷாக் விஷயம்!

சினிமாவில் அறிமுகமாகும் ஆமிர் கான் அம்மா

இந்தியா டுடேவின் செய்தியின்படி, ஆமிர் கானிடம் இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா உங்களது அம்மாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முடியுமா என கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து ஆமிர் அவரதுது தாயாரிடம் கேட்டார். ஆமிர் கானின் சகோதரி நிக்கத் கான் கூட 'சித்தாரே ஜாமீன் பர்' படத்தில் நடித்துள்ளார்.

'சித்தாரே ஜாமீன் பர்' இயக்குனர் ஆமிர் கானின் அம்மாவை படத்தில் சேர்க்க விரும்பினார். இதுவரை ஒருபோதும் தன் படப்பிடிப்பு தளத்திற்கு வராத என் அம்மா ஜீனத் ஹைசைன் படப்பிடிப்பு எங்கு நடைபெறுகிறது என்று கேட்டார், மேலும் படப்பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாக கூறினார்.

டைரக்டரின் ஆசை

அந்த சமயத்தில் நான் என் அம்மாவை ஷூட்டிங் செட்டிற்கு அழைத்து வந்த சமயத்தில் படக்குழு 'சந்தோஷமான திருமணப் பாடல்' ஒன்றை படமாக்கிக் கொண்டிருந்தது. அப்போது, "பிரசன்னா என்னிடம் வந்து, 'சார், உங்களுக்குப் பிரச்னை இல்லன்னா, அம்மிஜியை ஷாட்டில் நடிக்கச் சொல்ல முடியுமா? இது படத்தின் கடைசிப் பாடல்; திருமண விழா காட்சி. அவர் ஒரு விருந்தினராக இருந்தால் கூட பரவாயில்லை. இது படத்தில் உணர்ச்சிப்பூர்வமான காட்சியாகக் கூட இருக்கலாம். அதனால், அவரை படத்தில் நடிக்க வைக்கலாம் என நினைப்பதாக கூறினார்." என்றார்.

இயக்குநரை பார்த்து பைத்தியமா என்றேன்!

இதை பிரசன்னா தன்னிடம் கேட்ட சமயத்தில் நான் அதிர்ச்சி அடைந்தேன். அப்போது என்னையும் அறியாமல், உனக்கு பைத்தியமா? அவரை ஷூட்டிங் செய்யச் சொல்ல எனக்கு ஒருபோதும் தைரியம் வராது. அவர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறாள் என்றும் நான் சொன்னால் அவர் கேட்கப் போவதில்லை. உன் நேரத்தை வீணாக்காதே.' என்றும் சொல்லிக்கொண்டே இருந்தேன்.

எனக்கு சந்தோஷம் தான்

பின், தைரியத்தை வரவைத்துக் கொண்டு, நான் அவரிடம் சென்றேன். அப்போது, 'அம்மி, பிரசன்னா அவர் உங்களை ஒரு காட்சியில் நடிக்கச் சொல்கிறார் என்றேன். அவர் எந்த தயக்கமும் இல்லாமல் சரி, சரி என்று பதிலளித்தார். அதைக் கேட்டு நான் மறுபடியும் அதிர்ச்சியடைந்தேன்! இதன் காரணமாக என் அம்மா ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் இருக்கிறார். இதுவரை அவர் நடித்த ஒரே என்னுடைய படம்தான் என்பதில் சந்தோஷமாக உள்ளது என்றார்"

சித்தாரே ஜமீன் பர் படம்

சித்தாரே ஜமீன் பர் பற்றி இந்த படத்தில் ஜெனிலியா தேஷ்முக் நடிக்கிறார், அவர் அமீரின் காதலியாக நடிக்கிறார். ஆரூஷ் தத்தா, கோபி கிருஷ்ணன் வர்மா, வேதாந்த் சர்மா, நமன் மிஸ்ரா, ரிஷி ஷஹானி, ரிஷப் ஜெயின், ஆஷிஷ் பெண்ட்சே, சம்வித் தேசாய், சிம்ரன் மங்கேஷ்கர் மற்றும் ஆயுஷ் பன்சாலி ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

சித்தாரே ஜமீன் பர் கதை

ஆமிர் கான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த படம் தாரே ஜமீன் பர் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆமிர் ஒரு பெரிய கூடைப்பந்து அணியின் உதவி பயிற்சியாளராக நடிக்கிறார். வேலையில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் அல்லது சிறப்புத் திறன் கொண்ட கூடைப்பந்து வீரர்கள் குழுவின் பயிற்சியாளராக 90 நாட்கள் சமூக சேவை செய்ய உத்தரவிடப்படுவது போல் கதை அமைந்துள்ளது.