எனக்கு தாழ்வு மனப்பான்மை.. இரவு முழுவதும் குடிப்பேன்.. ஒழுக்கம் இல்லாமல் இருந்தேன்.. ரகசியம் உடைத்த ஆமிர் கான்
ஆமிர் கான் தான் நடிகனாக வந்த சமயத்தில் தாழ்வு மனப்பான்மை இருந்ததாகவும், தான் இரவு முழுவதும் குடித்துவிட்டு கிடந்ததாகவும் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆமிர் கான் தன் தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி நானே படேகரிடம் பேசியுள்ளார். வான்வாஸ் படத்தின் புரோமோஷனுக்காக அவர் ஜீ மியூசிக் தளத்திற்காக நானா படேகரிடம் பேட்டி அளித்தார்.
உயரத்தால் தாழ்வு மனப்பான்மை
அந்தப் பேட்டியில், "1980களின் பிற்பகுதியில் சினிமா உலகிற்குள் அவர் நடிக்க வந்தேன். அப்போது தான் 5 அடி, 5 அங்குல உயரத்தில் இருந்தேன். இது நடிகர்களின் சராசரி உயரத்தை விட குறைவு என்பதால் என்னை அனைவரும் கிண்டல் செய்வார்கள் என பயந்தேன். இதனால், எனக்கு மிகவும் அதிகளவில் தாழ்வு மனப்பான்மை இருந்தது.
எனது உயரம் காரணமாக மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நான் உணர்ந்தேன். இதுதான் என்னுடைய மிகப்பெரிய பயம். ஆனால் பின்னர், இதெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதை நான் உணர்ந்தேன் என ஆமிர் கான் கூறினார்.
பாதுகாப்பின்மையோடு இருந்தேன்
இருந்தாலும் அநத் குறிப்பிட்ட காலத்தில் ஒருவித பாதுகாப்பின்மை என்னை சுற்றி ஊடுருவியது. என் உயரத்தை கிண்டல் செய்து பலரும் என்னை 'திங்கு' (சுருக்கமாகவர்) என்று அழைப்பார்கள் என்று கூறினார்.
நாம் எவ்வளவு நேர்மையாக வேலை செய்கிறோம் என்பதும், உங்கள் வேலையால் எப்படி மக்களை மயக்க முடியும் என்பதும்தான் முக்கியம் என்பதை நான் தெரிந்துகொண்டேன். அதன் பிறகு, மற்ற அனைத்தும் முக்கியமற்றவையாக மாறியது" எனக் கூறினார்.
கெட்ட பழக்கங்களுக்கு அடிமை
மேலும், தன்னிடம் பல கெட்ட பழக்கங்கள் இருந்தது. நான் இப்போது குடிப்பதை முற்றிலும் நிறித்தி விட்டேன். ஆனால் புகைப்பிடிப்பதை என்னால் இன்னும் விட முடியவில்லை. நான் குடிக்கும்போது, இரவு முழுவதும் குடிப்பேன். பிரச்சனை என்னவென்றால், இது ஒரு நல்ல விஷயம் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் தவறு செய்கிறேன் என்றும் எனக்குத் தெரியும், ஆனால் என்னை என்னால் தடுக்க முடியாமல் போனது. இது தனிப்பட்ட வாழ்க்கையில் எனக்கு பெரும் போராட்டமாக அமைந்தது.
சினிமா வாழ்க்கையில் அப்படி அல்ல
ஆனால், நான் சினிமா வாழ்க்கையில் அப்படி செய்தது இல்லை. நான் ஷீட்டிங்கின் போது நேரம் தவறியது இல்லை. எந்த படத்தின் போதும் நான் இதுபோன்ற பிரச்சனைகளை கொண்டு வந்தது இல்லை. நான் என் வாழ்க்கையில் தான் ஒழுக்கம் அற்றவன், என் தொழிலில் அல்ல என்றார்.
இந்த பேட்டியின் மூலம் பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் ஆமிர் கான் தன் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.
பிஸியாக உள்ள ஆமிர் கான்
ஆமிர் கான் கடைசியாக 2022 ஆம் ஆண்டு லால் சிங் சத்தா எனும் ஆஸ்கார் விருது வென்ற ஃபாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ ரீமேக் படத்தில் நடித்தார். இந்தப் படம் மக்களிடம் சரியான வரவேற்பை பெறாமல் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சரிவை சந்தித்தது.
இதையடுத்து அவர், 2007ம் ஆண்டு வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற தாரே ஜமீன் பர் படத்தின் தொடர்ச்சியாக சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் ஆமிர் கான், தர்ஷீல் சஃபாரி மற்றும் ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது 2007 ஆம் ஆண்டு வெளியான தாரே ஜமீன் பர் படத்தின் தொடர்ச்சியாகும். ஆர்.எஸ்.பிரசன்னா 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான சாம்பியன்ஸ் படத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டாம் பாகத்தை இயக்குகிறார்.
தவறிய ஆஸ்கார் விருது
சன்னி தியோல், ஏக் தின், மகன் ஜுனைத் கான் மற்றும் சாய் பல்லவி நடித்த லாகூர் 1947 என்ற படத்தையும் ஆமிர் கான் தயாரிக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிரண் ராவ் இயக்கிய தனது தயாரிப்பான லாபத்தா லேடீஸ் படத்திற்காக ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் நுழைவாக இருந்த இந்த படம் ஆஸ்கார் 2025 க்கான இறுதிப்பட்டியலில் இடம் பெறத் தவறிவிட்டது.
டாபிக்ஸ்