Blue sattai Maran Twitt: ‘உப்மா விருதா?காட்டுங்க பாப்போம்’ ப்ளூ சட்டை கிண்டல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Blue Sattai Maran Twitt: ‘உப்மா விருதா?காட்டுங்க பாப்போம்’ ப்ளூ சட்டை கிண்டல்!

Blue sattai Maran Twitt: ‘உப்மா விருதா?காட்டுங்க பாப்போம்’ ப்ளூ சட்டை கிண்டல்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 17, 2022 01:15 PM IST

Bluesattai Maran criticized Iravin Nizhal Movie: 115 விருதுகளை மீடியா முன்பு காட்ட முடியுமா? யார் தந்தனர் என பட்டியல் உண்டா?

ப்ளூ சட்டை மாறன்-இரவின் நிழல் போஸ்டர்   -கோப்பு படம்
ப்ளூ சட்டை மாறன்-இரவின் நிழல் போஸ்டர் -கோப்பு படம்

ப்ளூ சட்டைமாறனின் விமர்சனத்தை தொடர்ந்து, அதற்கு பார்த்திபன் கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்க, அதற்கு மாறன் பதிலுக்கு ஒரு வாதத்தை வைக்க, இப்படியே இரவின் நிழல், பகலின் நிழலாக உலா வந்து கொண்டிருந்தது. ஒருவழியாக தியேட்டர் வசூலை முடித்து, தற்போது ஓடிடி.,யில் ஓடிக்கொண்டிருக்கும் இரவின் நிழல் படத்தை, இன்னும் முதல் ‘சிங்கிள் ஷாட்’ படம் இது அல்ல என்கிற வாதத்தோடு எதிர்த்துக் கொண்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

அது தொடர்பான நேரடியாக அல்லது முறைமுகமான பதிவுகளை அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்வதும் வழக்கம். அந்த வகையில், இன்று ஒரு பதிவை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மாறன், இதோ அதில் உள்ளவை:

‘‘115 விருதுகளை மீடியா முன்பு காட்ட முடியுமா? யார் தந்தனர் என பட்டியல் உண்டா?

Golden Globe, Cannes, Venice, Shanghai, Toronto...என பிரசத்தி பெற்ற விழாக்களில் ஒரு விருது கூட பெறவில்லை.

வாங்கிய பலதும் உப்மா நிறுவன அல்லது அங்கீகாரமற்ற online awards only?

Do not fool the people,’’

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். இது இரவின் நிழல் தொடர்பான பதிவு என்று மட்டும் தெரிகிறது. ஆனால், அதை அவர் நேரடியாக குறிப்பிடவில்லை. சமீபத்தில் இரவின் நிழல் படத்திற்கு விருதுகள் மற்றும் பாராட்டுகள் குவிந்து வருவதாக பார்த்திபன் மகிழ்ச்சியை வெளியிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.