Tamil News  /  Entertainment  /  Blue Star Director S Jayakumar Latest Interview About Ashok Selvan Keerthi Pandiyan Blue Star Movie

Blue Star Director: ‘காதல், நட்பு , அரசியல்..’ அரக்கோண இளைஞராக அசோக்..’ - புளூ ஸ்டார் இயக்குநர் ஜெயகுமார் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 13, 2024 06:51 PM IST

அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் ‘புளூஸ்டார்’.

புளூ ஸ்டார்
புளூ ஸ்டார்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அறிவு மற்றும் உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கின்றனர். இந்தப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் ரியல் லைஃபிலும் ஜோடியாக இணைந்திருக்கின்றனர். குறிப்பாக இந்தப்படத்தில் இருவரும் நடித்த ‘உந்தன் கை வீசிடும்’ பாடல் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்தப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் குறித்து அவர் பேசும் போது, “ இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது.சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள் வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகுபிரபலம்.

அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை , அவர்களின் விளையாட்டு , காதல், நட்பு , அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் ‘புளூஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் , பிரித்வி பாண்டியராஜன் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக்கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது. 

இந்தப்படம் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் , என அனைவருக்கும் இந்தப்படம் நெருக்கமான உணர்வைத்தரக்கூடியபடமாக இருக்கும். 

இந்தப்படத்திற்க்காக முழுக்க அரக்கோணம் ஊர் பசங்களாகவே நடிகர்கள் எல்லோரும் மாறிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தா பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.” என்று பேசினார். 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.