தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Blue Sattai Maran Tweet About Thirupur Subramaniam

Blue Sattai Maran: நீதி பற்றி பேசாதீர்கள்.. திருப்பூர் சுப்ரமணியம் பற்றி ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil
Nov 12, 2023 11:00 AM IST

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் குறித்து ப்ளூ சட்டை மாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

அதில், “காலை 9 மணி முதல் மட்டுமே சிறப்புக்காட்சிகளுக்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்தும், அதை மதிக்காமல் இன்று காலை 7 மணி முதல் பல காலைக்காட்சிகளை தனது மல்டிப்ளெக்சில் திரையிடுகிறது Sri Sakthi Cinemas, திருப்பூர்.

Book my show தளத்தில் ஆதாரம் உள்ளது. அதை முந்தைய ட்வீட்டில் ஷேர் செய்துள்ளோம்‌.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?

சங்க செயலாளர், பொருளாளர் மற்றும் இதர நிர்வாகிகளும் மௌனம் காப்பதற்கு காரணமென்ன?

ஒருவேளை நீங்கள் எதிர்க்கட்சிகளின் சார்பாக செயல்படுவதாக எடுத்துக்கொள்ளலாமா? அதனால்தான் திமுக அரசின் அனுமதியின்றி காலை 7 மணிக்காட்சிகளை Sri Sakthi Cinemas நிர்வாகம் திரையிட்டு கெத்து காட்டுகிறதா?

அரசாணையை மீறும் இந்த தியேட்டர் நிர்வாகத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? திருப்பூர் காவல்துறை இதுகுறித்து இன்றே விசாரணை மேற்கொள்ளுமா?

இன்று முதல் இந்த தியேட்டரில் அரசின் உத்தரவை மீறி திரையிடப்படும் காட்சிகளை..தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசும், காவல் துறையும்? “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு பதிவில், “இன்று மட்டுமல்ல. Tiger 3 படத்திற்கு நாளையும் காலை 7 மணி முதல் பல சிறப்புக்காட்சிகளை திரையிடுகிறது திருப்பூர் Sri Sakthi Cinemas.

இதற்கு தமிழக அரசின் அனுமதி இருப்பதாக எந்த செய்தியும் ஊடகங்களில் வரவில்லை. இதன் மூலம் கிடைக்கும் வரிப்பணம் தமிழக அரசுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

ஆகவே இதுபற்றி உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க திருப்பூர் காவல்துறைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் அரசாணைகளை மதிக்காத திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ்?

இன்று ரிலீசாகும் சல்மான் கானின் டைகர் 3 படத்திற்கு பல்வேறு காலைக்காட்சிகள் திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.

தமிழ் படங்களாகிய ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா 2 படங்களுக்கு மட்டுமே காலைக்காட்சி அனுமதியை தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதுவும் காலை 9 மணி முதல் மட்டுமே.

ஆனால் காலை 7 மணி முதல் ஏகப்பட்ட காட்சிகளை இந்த தியேட்டர் திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளதா? இல்லாவிட்டால் அது சட்டப்படி குற்றம்தானே?

இதற்கு முன்பு சன்னி தியோல் நடித்த Gadar 2 படத்திற்கு நள்ளிரவுக்காட்சிக்கான புக்கிங் பற்றிய ஆதாரத்தை வெளியிட்டு இருந்தோம். அதற்கும் அரசின் அனுமதி இல்லை.

'இனிமேல் நள்ளிரவு, அதிகாலைக்காட்சிகளை தமிழக திரையரங்குகளில் போட மாட்டோம். முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே. நேர்மை, நீதி, சட்டம்' என்று பல்வேறு செய்தி மற்றும் யூட்யூப் சேனல்களில் வீரவசனம் பேசியது யார் தெரியுமா?

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். இப்போது மீண்டும் இந்த உறுதிமொழி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டருக்கு முதலாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது இவர் எப்படி எதிர்த்து பேசுவார். என்ன நடவடிக்கை எடுப்பார்?

அந்த சங்கத்தில்..இந்த சட்ட மீறலை தட்டிக்கேட்டும் திராணி ஒருவருக்கு கூடவா இல்லை?

'போதைப்பழக்கத்தை கைவிடுங்கள், ஹெல்மட் போடுங்கள்' என மக்களுக்கு அறிவுரை சொல்லும் பெரிய ஹீரோக்களும், இயக்குனர்களும் இதைப்பற்றி எல்லாம் வாய் திறக்க வக்கற்றவர்கள். அவர்களுக்கு முதுகெலும்பும் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யம்.

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என ஒருவரும் வாய் திறக்கப்போவதில்லை.

'தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு, அதன் மூலம் சோறுசாப்பிட்டு, நெகட்டிவ் விமர்சனம் செய்கிறாயே?' என்று ஒவ்வொரு சேனலிலும் விமர்சகர்களை திட்டி சவுண்ட் விடத்தான் லாயக்கு.

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா (தயாரிப்பாளர்), பிரவீன் பூந்தி, செய்யாறு ஓலா போன்ற வடை சுடும் போலி பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்கள், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர்கள் என யாரும் இதைப்பற்றி பேசியதுமில்லை. பேசப்போவதுமில்லை.

திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளரும், திருச்சி தியேட்டர் ஓனருமான ஸ்ரீதர் அவர்கள் மட்டுமே நேர்மையான பேட்டிகளை தந்து வருகிறார்.

ஆனால் சங்கத்தலைவருக்கு எதிராக அவர் எப்படி பேச முடியும்?

உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கோரிக்கை:

இனிமேல் பேட்டிகளில் நேர்மை, நீதி பற்றி தயவு செய்து பேசாதீர்கள். தமிழக மக்கள் கைகொட்டி சிரிப்பார்கள்.

ஏற்கனவே சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள். “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பதிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

IPL_Entry_Point

டாபிக்ஸ்