Blue sattai Maran: "இன்னும் தலைவரு நம்மல பைத்தியகாரன்னே நினைச்சிட்டு இருக்காரு" - லால் சலாம் படத்தை கலாய்த்த ப்ளூசட்டை
ரஜினிகாந்தை தொடர்ந்து விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன், லால் சலாம் படத்தை சும்மா விட்டு வைக்கவில்லை. வழக்கமான ரஜினியின் படங்களுக்கான முதல் நாள் மாஸ் இல்லை எனவும் கலாய்த்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் ரிலீஸ் என்றாலே தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் திருவிழா போல் கொண்டாடப்படும் வாடிக்கையான விஷயமாகவே இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் சில தனியார் அலுவலங்கள் ரஜினி பட ரிலீஸ் நாளான்று, தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நிகழ்வுகளும் நடைபெறும்.
ஆனால் இவை எதுவும் இல்லாமல், ரஜினி படம் ரிலீஸ் என்கிற மாஸ் இல்லாமல் சத்தமின்றி வெளியாகியுள்ளது லால் சலாம் திரைப்படம். இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை தோன்றும் ரஜினியின் கதாபாத்திரம் மதநல்லணக்கத்தை பேசும் விதமாக அமைந்திருக்கிறது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
வழக்கம் போல் ரஜினி ரசிகர்கள் லால் சலாம் ரிலீசை பேனர் வைத்து, ஆட்டம் பாட்டம் என பெரிதாக கொண்டாடியுள்ளனர். காலை காட்சிகள் ஹவுல் புல்லாக ஓடியபோதிலும், அடுத்தடுத்த காட்சிகள் போதிய கூட்டமின்ற திரையரங்குகள் காற்று வாங்கிதாக கூறப்படுகிறது. படம் தொடர்பாக நேர்மறையான விமர்சனங்கள் வந்தபோதிலும் பலரும் லால் சலாம் பார்க்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை
ப்ளூசட்டை மாறன் விமர்சனம்
எந்த கதாபாத்திரமும் மனதில் ஒட்டவில்லை. தலைவரு கர்சிப் விக்க பாம்பே போய் டான் ஆகியிருக்காறு. வில்லன் கேரக்டரும் படு மொக்கையாக இருந்தது. படம் 90களில் நடக்கும் பீரியட் படமாக காட்டுகிறார்கள். 90 வருஷத்துக்கு முந்தி எடுத்த படம் போல் உள்ளது. படத்துக்காக பெரிதாக செலவே செய்யவில்லை.
இந்த படம் வரதுக்கு முன் பிளாப்ன்னு உறுதியாகிடுச்சு. பட புரொமஷனில் எங்கப்பா சங்கி இல்லன்னு சொன்னார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஆரஞ்சு பழத்துக்கு ஆரஞ்சு பெயிண்ட் அடிச்சதான் தெரியுமா?
இன்னும் தலைவரு நம்ம பைத்தியகாரன்னே நினைச்சிட்டு இருக்காரு. அது உண்மைன்னா படத்தை பார்க்கலாம்" என்று காலாய்த்து தள்ளியுள்ளார்.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், லால் சலாம் முழுக்க முழுக்க ரஜினி காந்த் படம் இல்லை என்றாலும், படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தால், நானே நடிக்க முன்வந்தேன் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில், மற்ற ரஜினி படங்களை போல் லால் சலாம் படத்துக்கு பெரிதாக ஓபனிங் கிடைக்கவில்லை எனவும், டிக்கெட்டுகளும் பெரிய அளவில் புக் ஆக வில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து காலி இருக்கைகளுடன் லால் சலாம் வெளியான திரையரங்கம் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, ப்ளூ சட்டை மாறன் காளியோட ஆட்டம் காலியான கூட்டம் என காலியாக இருக்கும் இருக்கை போட்டோவை ஷேர் செய்து கலாய்த்துள்ளார்.
டாபிக்ஸ்