Blue Sattai Maran: வின்னர் கில்லி தான்.. இயக்குநர் ஹரியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
Blue Sattai Maran: இயக்குநர் ஹரியின் முந்தைய படங்களின் ஸ்மெல் ரத்னத்தில் ஹெவியாக இருந்ததால் ரசிகர்கள் கடும் காண்டு. கில்லி அதிரடி வசூல். சனி, ஞாயிறு நாட்களிலும் கில்லி தான் வின்னர் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு உள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்
இயக்குநர் தரணி இயக்கத்தில் ஸ்ரீ சூரியா மூவிஸ் தயாரித்த படம், கில்லி. இந்த படத்தில் தளபதி விஜய் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.
கில்லி படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி, ஜானகி சபேஷ், நான்சி ஜெனிபர், நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம் மற்றும் பாண்டு ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கான இசையை வித்யாசாகர் இசையமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரதன் வசனம் எழுதினார்.
தெலுங்கு ரீமேக்
2003 ஆம் ஆண்டு தெலுங்குப் படமான "ஒக்கடு" படத்தின் ரீமேக்கான " கில்லி ", அதன் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை வென்றது.