தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Blue Sattai Maran: வின்னர் கில்லி தான்.. இயக்குநர் ஹரியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maran: வின்னர் கில்லி தான்.. இயக்குநர் ஹரியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

Aarthi Balaji HT Tamil
Apr 29, 2024 01:44 PM IST

Blue Sattai Maran: இயக்குநர் ஹரியின் முந்தைய படங்களின் ஸ்மெல் ரத்னத்தில் ஹெவியாக இருந்ததால் ரசிகர்கள் கடும் காண்டு. கில்லி அதிரடி வசூல். சனி, ஞாயிறு நாட்களிலும் கில்லி தான் வின்னர் என்று ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு உள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

கில்லி படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி, ஜானகி சபேஷ், நான்சி ஜெனிபர், நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம் மற்றும் பாண்டு ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கான இசையை வித்யாசாகர் இசையமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரதன் வசனம் எழுதினார்.

தெலுங்கு ரீமேக்

2003 ஆம் ஆண்டு தெலுங்குப் படமான "ஒக்கடு" படத்தின் ரீமேக்கான " கில்லி ", அதன் ஈர்க்கும் கதைக்களம் மற்றும் சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களை வென்றது.

ஒரு போட்டிக்காக மதுரைக்குச் செல்லும் நம்பிக்கைக்குரிய கபடி வீரரான சரவண வேலு பின் தொடர்கிறது கில்லி திரைப்படம். முத்துப்பாண்டியிடமிருந்து, தனலட்சுமியை மீட்பதற்காக இந்த பயணம் தொடரும். அவளது விருப்பத்திற்கு மாறாக அவரை எப்படியாவது வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல முத்துப்பாண்டியிடமிருந்து காப்பாற்றுகிறார் கில்லி. அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதே கதையாகும்.

தலைசிறந்த படம்

கில்லி, படம் ஏப்ரல் 17 ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு வெளியான போது, ​​அது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் 200 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இது ஒரு பிளாக் பஸ்டர் மற்றும் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படமாக மாறியது. 
" கில்லி " திரைப்படம் விஜய்யின் கேரியரில் தலைசிறந்த படமாக கருதப்படுகிறது.

கில்லி படம் வெளியாகி 20 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இந்த திரைப்படம் ஏப்ரல் 20, 2024 அன்று 4K வடிவத்தில் மீண்டும் வெளியிடப்பட்டது, இது திரைப்பட ஆர்வலர்களிடையே உற்சாகத்தைத் தூண்டியது.

விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்

இந்நிலையில் வழக்கம் போல் திரைப் பிரபலங்களையும், படங்களையும் கலாய்த்து பேசும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த முறை இயக்குநர் ஹரியை கலாய்த்து இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், “ இயக்குநர் ஹரியின் முந்தைய படங்களின் ஸ்மெல் ரத்னத்தில் ஹெவியாக இருந்ததால் ரசிகர்கள் கடும் காண்டு. கில்லி அதிரடி வசூல். சனி, ஞாயிறு நாட்களிலும் கில்லி தான் வின்னர்.

அடுத்த விஜய் ஆண்டனி, விஷால் படங்கள் வரும்போது துப்பாக்கி, கத்தி போன்ற சூப்பர் ஹிட் படங்களை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்.

அதனை டாக்கில் செய்ய.. பிச்சைக்காரன், சண்டைக்கோழிகளை இறக்க பாதிக்கப்பட்ட முகாம் தீவிர ஆலோசனை.

புதிய மொக்கை படங்களை பார்ப்பதை விட.. பழைய நல்ல படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆறுதல் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்