தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Blue Sattai Maran Slams Actors And Directors Who Not Raised Voice In Trisha Issue

Blue Sattai Maran: வாயில் கொழுக்கட்டை.. உங்களுக்கு எதுக்கு மீசை? - இயக்குநர், நடிகர்களை கிழித்த ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil
Nov 20, 2023 07:59 AM IST

த்ரிஷா விவகாரம் தொடர்பாக நடிகர்கள், இயக்குநர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானின் செயலுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இருப்பினும் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சில பெரிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் த்ரிஷாவிற்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “த்ரிஷா குறித்து மன்சூர் பேசியதற்கு நடிககைகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர்‌.

இயக்குனர்களில் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் போன்றோர் மட்டுமே பேசியுள்ளனர். முன்னணி நடிகர்கள் மற்றும் சீனியர் இயக்குனர்கள் அனைவரும் வாயில் கொழுக்கட்டையை வைத்துள்ளனர்.

இவர்களுடன் பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.

ஆனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. படத்தில் மட்டுமே பெண்களுக்காக புரட்சி வசனம் பேசுவார்கள் இந்த ஹீரோக்கள்.

சீனியர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இன்னும் சுத்தம். உங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசை?” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா தனது சமூக வலைதளத்தில், ”சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி கேவலமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசிய ஒரு வீடியோவை பார்த்தேன். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

மேலும் இது பாலியல் அவமரியாதை, மோசமான ரசனையானாக பார்க்கிறேன். அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் என் நடிப்பை பகிர்ந்து கொள்ளாதது நினைத்து நிம்மதியடைகிறேன்.

மேலும் எனது திரையுலக வாழ்க்கை முழுவதும் அவருடன் சேர்ந்து நடிக்கமாட்டேன். ஒரு படம் தான் நடித்தோம், இனியும் சேர்ந்து நடிக்க போவது கிடையாது. பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் “ என தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் அடித்த திரைப்படம், லியோ. இந்த படத்தில் முக்கியமான கேமியோ ரோலில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்