Tamil News  /  Entertainment  /  Blue Sattai Maran Questioned Why Kollywood Actors Not Giving Voice Against Trisha Issue

Blue Sattai Maran: எதுக்கு உத்தமன் வேடம்.. நடிகர்களை சராமாறியாக கேள்வி கேட்கும் ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil
Nov 21, 2023 11:40 AM IST

த்ரிஷாவிற்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானின் செயலுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இருப்பினும் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சில பெரிய இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் இந்த சம்பவம் தொடர்பாக வாய் திறக்கவில்லை.

மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி இதற்கு கண்டனம் தெரிவித்து ட்விட் செய்து உள்ளார். அதில், “த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்தை ஈர்த்தது.

இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அல்லது பெண்ணுக்கும் அருவருப்பானதாகவும், அருவருப்பானதாகவும் இருக்கிறது. இந்தக் கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் வக்கிரத்தில் துவண்டு விடுகிறார்கள். நான் உடன் நிற்கிறேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில் த்ரிஷாவிற்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “ த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் தவறாக பேசியதற்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்.

தமிழ் நடிகர்கள்.. தீபாவளி கொழுக்கட்டையை வாயில் இருந்து இன்னும் எடுக்கவில்லை.

படங்களில் மட்டும் பெண்களை காப்பாற்றும் அட்டைகத்திகள் இவர்கள். கேட்டால் நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்து விட்டது என சாக்கு சொல்வார்கள்.

நீங்கள் தனியே கண்டனம் தெரிவித்தால் என்னவாகி விடும்?உங்களுடன் நடித்த கதாநாயகிக்கே குரல் தர வக்கற்ற உங்களுக்கு எதற்கு அரசியல் ஆசை?

எதற்கு சினிமா மேடைகளிலும், பேட்டிகளிலும், படங்களிலும்.. உத்தமன் வேடம்? " எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.