Blue Sattai Maran: மனசாட்சியோடு பதில் சொல்லுங்க.. மீண்டும் பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Blue Sattai Maran: மனசாட்சியோடு பதில் சொல்லுங்க.. மீண்டும் பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்

Blue Sattai Maran: மனசாட்சியோடு பதில் சொல்லுங்க.. மீண்டும் பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்

Aarthi V HT Tamil
Aug 26, 2023 09:27 AM IST

ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனை வம்பிழுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
பார்த்திபனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்

சமீபத்தில் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்ற மாயவா தூயவா பாடலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இது குறித்து பார்த்திபன், "எத்தனையோ சர்வதேச விருதுகளை இரவின் நிழல் வென்றபோதும், நமது தேசிய விருதுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.. இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை ஸ்ரேயா கோஷலுக்கு அறிவித்தது நன்றி” என்றார்.

இந்நிலையில் வழக்கம் போல் ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனை வம்பிழுக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “பார்த்திபன் சார்.. நீங்கள் வாங்கிய 120 சர்வதோசை விருதுகள் எந்தெந்த தேதிகளில் வழங்கப்பட்டன? ஒவ்வொன்றிற்குமான அதிகாரப்பூர்வ வெப்சைட் பட்டியலை வெளியிடுவீர்களா?

இந்த சர்வதேச விருதுகளை வழங்கியவர்கள் யார்? அவற்றின் அல்லது அவர்களின் பெயரென்ன?

120 விருது கமிட்டிகளின் தலைவர் அல்லது பொறுப்பாளர்கள் கையெழுத்திட்ட உண்மையான சான்றிதழ்களை ப்ரெஸ் மீட் வைத்து நிருபர்களுக்கு காட்ட முடியுமா?

ஒவ்வொரு விருது அமைப்பும் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?ஆம். நாங்கள் தான் விருது தந்தோம் என 120 விருது கமிட்டிகளின் தலைவர்கள் அல்லது பொறுப்பாளர்கள் .. வீடியோ மூலம் பேட்டி தந்து உங்கள் மீதான சந்தேகத்தை போக்குவார்களா?

ஒவ்வொரு கேள்விக்கும் மனசாட்சியுடன் நேர்மையா பதில் சொல்லுங்க சார். இல்லைன்னா நீங்க சொன்னது பச்சைப்பொய் என்றுதான் அனைத்து தமிழர்களாலும் உணரப்படும்.

இந்த ஆதாரங்களை திரட்டித்தர ஒருநாளே அதிகம். இதை உங்கள் உதவியாளர்கள் எளிதில் செய்து விடலாம். புதிய தகவலை தேட அவசியமே இல்லை.

விருது வாங்கியதற்கான அங்கீகாரங்கள் உங்களுக்கு மெயில் மூலம் வந்திருக்கும். அவற்றை மீடியாவுக்கு forward செய்தாலே போதும்.

கணக்கு 120 ஆக இருக்க வேண்டும். ஒன்று குறைந்தாலும் நீங்கள் கூறிய அனைத்தும் பொய் என்றே பொருள்படும். Your second countdown starts NOW” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.