Blue Sattai Maran: விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத சூர்யா.. கிளிசரின் என கிண்டல் அடித்த விமர்சகர்!
அஞ்சலி செலுத்தும் பொழுது அவர் சோகம் தாள முடியாமல் கதறி அழுதார்
நடிகர் சூர்யா விஜயகாந்த் நினைவிடத்தில் அழுததை ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக கிண்டல் அடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் கேப்டன் என்ற அடை மொழிக்கு பாத்திரப்பட்ட நடிகர் விஜயகாந்த் அண்மையில் மறைந்தார்.
அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். சில முன்னணி நடிகர்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்ததால், அவர்களால் விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. இதனையடுத்து பல பிரபலங்கள் அதன் பின்னர் அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்திய கார்த்தி விஜயகாந்த் உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியாதது தன்னுடைய வாழ்நாள் குறையாக இருக்கும் என்று பேசினார்.
இந்த நிலையில் இன்று நடிகர் சூர்யா விஜயகாந்த் நினைவிடத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி செலுத்தும் பொழுது அவர் சோகம் தாள முடியாமல் கதறி அழுதார்.
இந்த நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வராத நடிகர்களை விமர்சித்து வரும் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தற்போது சூர்யாவையும் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் சென்னை கடைகளில் கிளிசரின் வியாபாரம் அதிகரிப்பு என்று குறிப்பிட்டு அதில் கிளிசரின் மற்றும் ஒருவர் அழுவது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது
டாபிக்ஸ்