தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Blue Sattai Maran Criticized Ajith Kumar For Not Attending Vijayakanth Funeral

Blue Sattai Maran: விஜய்காந்தின் அஞ்சலிக்கு வராத அஜித்; ‘ஷூட்டிங்ன்னு காது குத்திட்டு அங்க’.. -ப்ளூ சட்டை மாறன் விளாசல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 03, 2024 02:37 PM IST

இந்தப்படத்தில் அவருடன் நடிகைகள் த்ரிஷா, ரெஜினா, நடிகர்கள் அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், துபாய் சுற்றிய பகுதிகளில் நடந்து வருகிறது.

ப்ளூ சட்டை மாறன்!
ப்ளூ சட்டை மாறன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்தில் அவருடன் நடிகைகள் த்ரிஷா, ரெஜினா, நடிகர்கள் அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான், துபாய் சுற்றிய பகுதிகளில் நடந்து வருகிறது.

 

 

படப்பிடிப்பிற்காக அங்கு சென்று இருந்த அஜித், புத்தாண்டில் வெளிநாட்டு பெண் ஒருவருடன் ஆடியோ வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித் துபாயில் சுற்றி வருவது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. 

இந்த நிலையில், அண்மையில் மறைந்த விஜய்காந்தின் இறுதி அஞ்சலிக்கு அவரும் இன்னும் சில முன்னணி நடிகர்கள் வராததையும் குறிப்பிட்டு, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகளை மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ 'விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங்' என காதுகுத்திய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள்.. ஆங்கில புத்தாண்டை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடிவிட்டு சென்னை வருகிறார்கள்.

ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு... ஆறாம் தேதி நடைபெறும் 'கலைஞர் 100' கலைநிகழ்ச்சியில் பங்கேற்க திட்டம்.” என்று பதிவிட்டு வருகிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.