Ajith Vs Vijay: குட் பேட் அக்லி ஓடிய தியேட்டரில் ஒலித்த TVk கோஷம்.. அடிதடியில் முடிந்த தீராத பஞ்சாயத்து..
Ajith Vs Vijay: குட் பேட் அக்லி படத்தை பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் சிலர் தியேட்டரில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் பெயரை கத்தி கூச்சலிட்டதால் அடிதடி நடந்துள்ளது.

Ajith Vs Vijay: அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த குட் பேட் அக்லி படம் தியேட்டரில் வெளியானதைத் தொடர்ந்து அவர்கள் படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், கொண்டாட்டத்திற்கு நடுவே ஒரு கலவரம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
விஜய் ரசிகர்களை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
பிரபல திரைப்பட விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்த விஷயத்தை தனது எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்து, விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவருடைய பதிவில், "GoodBad Ugly ஓடிய தியேட்டரில் TVK, TVK என கத்திய விஜய் ரசிகர்களுக்கு தர்ம அடி. சமீபகாலமாக பொது இடங்களில் இப்படி கத்தி வருகிறார்கள். இனி அடிக்கடி தர்ம அடி வாங்கப்போவது உறுதி." எனக் கூறியுள்ளார்.
விஜய்யின் அரசியலை கிண்டலடிக்கும் மாறன்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த சமயத்தில் இருந்தே அவரை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்து வந்த வண்ணம் இருந்தார். அவ்வப்போது விஜய்யின் அரசியல் அறிக்கைகளையும் செய்கைகளையும் வெகுவாக விமர்சிசத்து வந்தார். இப்போது அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களையும் அவர்களது செயலையும் விமர்சித்துள்ளார்.
குட் பேட் அக்லி படம்
நீண்ட நாட்களாக அஜித்தை ரசிகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்களோ அதனை அப்படியே திரையில் ஆதிக் ரவிச்சந்திரன் காண்பித்து இருப்பார் என்ற நம்பிக்கையில், குட் பேட் அக்லி படத்தை பார்க்க, தியேட்டருக்கு படை எடுத்து வந்தனர் ரசிகர்கள். இந்த படத்திற்கான ஓபனிங்கை முன்னிட்டு பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது, கேக் வெட்டுவது, பைக் பேரண செல்வது. மேள தாளங்களோடு ஆடுவது என வைப்பை ஏற்றி வந்தனர்.
வைப்பை கெடுக்காத ஆதிக்
அந்த வைப்பை கெடுக்காத அளவிற்கு, அஜித்தை வைத்து திரையில் சம்பவம் செய்ததாக ஆதிக் ரவிச்சந்திரனை ரசிகர்கள் புகழ்ந்து வந்தனர். இதனால் அஜித்தையும் ஆதிரக் ரவிச்சந்திரனையும், படத்திற்கு துள்ளல் இசை போட்ட ஜிவி பிரகாஷையும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் ரடிகர்கள். அத்தோடு நில்லாமல், படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்குப் பின் வைக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளைக் கூட தவறவிடாமல் மெய்மறந்து பாக்த்தனர் அஜித் ரசிகர்கள். ப்ளூட
அஜித்- விஜய் ரசிகர்களிடையே கைகலப்பு
இப்படியான சூழலில், அஜித் ரசிகர்கள் சூழந்திருந்த தியேட்டர் ஒன்றில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கைகலப்பு நடந்ததாக செய்திரளும், வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. என்னதான் நடிகர்கள் அஜித்தும் விஜய்யும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் இப்போது வரை சில அஜித் விஜய் ரசிகர்கள் யார் பெரியவர் என்ற சண்டையை போட்டுக் கொண்டு தான் உள்ளனர்.
வீடியோ உண்மையா?
அதன் விளைவாகவே, அஜித் ரசிகர்கள் நிறைந்த தியேட்டரில் போய் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை கத்தி கூச்சலிட்டுள்ளனர் எனக் கூறி, அஜித் விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொண்டுள்ளதாக வீடியோ வெளியாகி ்ளளது. இந்த வீீீீீீீீடியோவில் முழுவதுமான எந்த காட்சிகளும் இடம்பெறவில்லை. வெறும் சண்டையிட்ட காட்சிகள் மட்டுமே இருப்பதால் இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டதா அல்லது வேண்டுமென்றே பரப்பப்பட்டதா என தற்போது வரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதனால், சமூக வலைதளங்களில் அஜித் விஜய் ரசிகர்கள் போர்க்கொடி தூக்காமல் இருந்தால் சரி.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
