Blue sattai Maran: ‘ரிலீஸான 2 படங்களுமே ஃப்ளாப்பு.. இதுல வேள்பாரி எடுக்கப்போறாராம்’ -ஷங்கரை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களின் இமாலய தோல்விகளால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை அடைந்துள்ளனர். - ஷங்கரை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்

இயக்குநர் ஷங்கர் அவரது கெரியரின் சரிவு காலத்தில் இருக்கிறார் என்று திரைவட்டாரம் சலசலத்துக்கொண்டிருக்கிறது. ஆம், எந்திரன் படத்திற்கு பின்னதாக அவர் எடுத்த ஐ படுதோல்வி அடைந்த நிலையில், எந்திரன் 2.0 கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கடுத்தபடியாக அவர் எடுத்த இந்தியன் 2 படுதோல்வி அடைந்ததோடு அவருக்கான பெயரையும் ட்ரோல்களுக்கு உள்ளாக்கியது.
கை கொடுக்காத கேம் சேஞ்சர்
கேம் சேஞ்சரில் அதை மீட்டெடுத்து பெரிய வெற்றியை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப்படமும் சுமாரான வெற்றியைதான் பெற்றது. இந்த நிலையில், அவர் கொடுத்து வரும் பேட்டிகளில் அடுத்ததாக வேள்பாரி நாவலை படமாக எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பெரு வெற்றியை தர முடியாத அவரால், அந்தப்படத்தை எடுக்க இயலுமா? இவ்வளவு பிரமாண்ட பட்ஜெட் படத்தை எந்த தயாரிப்பு நிறுவனம் அவரை நம்பி எடுக்க முன்வரும் உள்ளிட்ட பல கேள்விகள் தொக்கி நிற்கின்றன. இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் ஷங்கரை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.