Blue Sattai Maaran: பிச்சைக்கார தமிழர்களே.. லால் சலாம் ஹீரோயினை வச்சு செய்த ப்ளு சட்டை மாறன்..வெடிக்கும் சர்ச்சை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Blue Sattai Maaran: பிச்சைக்கார தமிழர்களே.. லால் சலாம் ஹீரோயினை வச்சு செய்த ப்ளு சட்டை மாறன்..வெடிக்கும் சர்ச்சை

Blue Sattai Maaran: பிச்சைக்கார தமிழர்களே.. லால் சலாம் ஹீரோயினை வச்சு செய்த ப்ளு சட்டை மாறன்..வெடிக்கும் சர்ச்சை

Aarthi Balaji HT Tamil
Jan 30, 2024 09:30 AM IST

லால் சலாம் ஹீரோயின் தன்யா பாலகிருஷ்ணா குறித்து கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன்.

தன்யா பாலகிருஷ்ணா
தன்யா பாலகிருஷ்ணா

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாா். இந்தப் படத்துக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்று இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள 'லால் சலாம்' திரைப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸாகிறது.

சென்னை சாய் ராம் கல்லூரியில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ரஜினிகாந்த், விஜய் குறித்து பேசியது வைரலானது.

 இந்த படத்தின் கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணா குறித்து கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார் ப்ளு சட்டை மாறன். 

அவர் வெளியீட்டு உள்ள பதிவில், “ லால் சலாம் - நடிகர்களின் பின்னணி:

பெயர்: தான்யா பாலகிருஷ்ணன். பெங்களூரில் வசிப்பவர். ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற சில தமிழ்ப்படங்களில் நடித்தார். வாயை மூடி பேசவும், மாரி போன்ற படங்களை இயக்கிய பாலாஜி மோகனை திருமணம் செய்து கொண்டார்.

சில வருடங்களுக்கு முன்பு CSK vs RCB அணிகளுக்கு இடையே நடந்த IPL போட்டி பற்றி இவர் போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. அது இதுதான்:

Dear Chennai, you beg for water we give! You beg for electricity, we give! ur people come and occupy our beautiful city and kocha paduthify it, we allow and nw u wr at our mercy to go to playoffs, we let be!! Like this you begging we giving!"

தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை எடுக்கிறீர்கள். எங்கள் பெங்களூரை ஆக்ரமித்து, அந்த ஊரை கொச்சைப்படுத்துகிறீர்கள். எங்களிடம் பிச்சை கேட்பதால்.... தருகிறோம்.

இவருக்கு எதிராக HateDhanya எனும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ஆனதால்... கடுப்பான இவர் 'இனி தமிழ்ப்படங்களில் நடிக்கவே மாட்டேன்' என சபதம் போட்டார். (I am withdrawing from the film I have accepted and won't come back, she said),

சரி இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று கேட்கிறீர்களா?

லால் சலாம் படத்தின் கதாநாயகியே இவர்தான்.

எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது.. தமிழர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று கூறிய இவரை ஹீரோயினாக நடிக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா. இதற்கு ரஜினியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தலீவரை சங்கி இல்லையென்று கூறிய ஐஸ்வர்யா... இதற்கு என்ன பதில் கூறுவார்?

சினிமா ரசிகர்களே... உங்கள் வேலை... இந்த படத்தை சூப்பர் ஹிட் ஆக்குவது மட்டுமே. மற்றபடி வேறு எந்த கேள்வியும் கேட்காதீர்கள். எஞ்சாய் “ என பதிவிட்டு உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.