'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?

'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?

Malavica Natarajan HT Tamil
Published May 12, 2025 04:53 PM IST

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கடவுள் பெருமாள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி பாஜகவினர் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளனர்.

'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?
'கடவுள் பெருமாளை அவமதித்தார் சந்தானம்'.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பாஜகவினர்.. பட ரிலீஸிற்கு சிக்கலா?

அந்த வகையில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்பது தில்லுக்கு துட்டு படத் தொடரின் 4வது படம் ஆகும். இந்தப் படம் மே 16 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸிற்கு எதிராக காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சந்தானத்தின் மீது புகார்

சேலம் காவல் ஆணையரகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், கடவுள் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் அதனால், இந்தப் படத்தின் ரிலீஸை தடை செய்ய வேண்டும் எனக் கூறினர். அத்துடன் படத்தின் கதாநாயகனான சந்தானத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு அளித்தனர்.

கடவுளை அவமதித்தாரா சந்தானம்?

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் உள்ள கிஸ்ஸா 47 (Kissa 47) என்ற பாடலின் தொடக்கத்தில் "ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா" என்ற பக்திப் பாடலை பாடிவிட்டு பின் அதிலிருந்து ராப் பாடல் வரிகள் தொடங்குகிறது. அதனால், இந்தப் படத்தில் கடவுள் பெருமாள் அவமதிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி பாஜகவினர் நடிகர் சந்தானத்தின் மீதும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இவர்களின் புகாருக்கு பின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் பாடல்களை கேட்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடி நெக்ஸ்ட் லெவல்

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீர்த்திகா திவாரி, யாஷிகா ஆனந்த், காஸ்தூரி ஷங்கர், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் மாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

டிடி ரிட்டர்ன்ஸ்" படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். வெங்கட் போயனப்பள்ளி (நிஹாரிகா எண்டர்டெயின்மென்ட்) மற்றும் ஆர்யா (தி ஷோ பீப்பிள்) இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஓஃப்ரோ இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.