நயனை இம்ப்ரஸ் செய்வதே தொழில்.. 30 நாட்கள் ரீ ஷூட்.. எகிறிய பட்ஜெட்.. கோபமடைந்த தனுஷ் - நானும் ரெளடிதான் பஞ்சாயத்து!
நயனை இம்ப்ரஸ் செய்வதே தொழில்.. 30 நாட்கள் ரீ ஷூட்.. எகிறிய பட்ஜெட்.. கோபமடைந்த தனுஷ் - நானும் ரெளடிதான் பஞ்சாயத்து!
நானும் ரெளடிதான் திரைப்படத்தின் போது நடந்த பிரச்சினை குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி தி டிபேட் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “விக்னேஷ் சிவன் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுசுக்கு உதவியாக இருந்தார். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அவரது வேலையை பார்த்த தனுஷ் உனக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ன வேண்டும், கேள் என்றார். இதையடுத்து படம் செய்வதற்காக அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த விக்னேஷ் இவன், தான் ஒரு கதை வைத்திருப்பதாகவும் அதை நீங்கள் தயாரித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
இதையடுத்து நான் செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்த தனுஷ், அந்த படத்தை தயாரித்தார். அந்தத் திரைப்படம் தான் நானும் ரளெடிதான். அந்த திரைப்படத்திற்குள் நயன்தாராவை அழைத்து வந்ததும் தனுஷ்தான்.
இப்படி நட்புறவாக பழகி வந்த விக்னேஷ் சிவன் தனுஷ் நட்பு முறிந்ததற்கான காரணமும் அந்தபடம்தான்; அப்படி என்ன பஞ்சாயத்து நடந்தது? உண்மை என்ன? என்பது குறித்து முத்த பத்திரிகையாளர் பிஸ்மி பேசினார்.
ஷூட்டிங்கில் கோட்டை விட்ட விக்கி
அவர் பேசும்பொழுது, விக்னேஷ் சிவன் நயன்தாரா சம்பளம் போக நானும் ரெளடிதான் திரைப்படத்திற்கு நான்கு கோடி பட்ஜெட் என தீர்மானிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கு இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து ஷூட்டிங்கில் கோட்டை விட்ட விக்னேஷ்சிவன், நயன்தாராவை மகிழ்ச்சி படுத்துவதிலும் இம்ப்ரஸ் செய்வதிலுமே முழு கவனத்தையும் செலுத்தினார்.
இதனால் படத்தினுடைய பட்ஜெட் 4 கோடியிலிருந்து 17 1/2 கோடியாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 30 நாட்கள் படத்தை ரீஷூட் செய்தார் விக்னேஷ் சிவன். இது ஒரு தயாரிப்பாளராக தனுசுக்கு வலியையும் வேதனையையும் உச்சகட்ட கோபத்தையும் உண்டாக்கியது. இதையடுத்து இனி என்னுடைய முகத்திலேயே விக்னேஷ் சிவன் விழிக்க கூடாது என்று சொல்லி தனுஷ், விக்னேஷ் சிவன்னுடைய நம்பரையே பிளாக் செய்து விட்டார்.. இதையடுத்து விக்னேஷ் சிவன் தனுஷினுடைய நண்பர்கள் மூலமாக தனுசை சமாதானம் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்தார். தன்னுடைய நம்பரையும் அன்லாக் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். அந்த படம் வெளியே வந்த பொழுது மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தை வாங்கிய எல்லோருக்கும் இலாபம் கிடைத்தது. ஆனால் தனுசுக்கு அந்த படத்தில் லாபம் கிடைக்கவில்லை
நாம் ஒரு பையனுக்கு வாழ்க்கை கொடுத்தோம் அந்தப் பையன் இன்று நம்மளை இப்படி காலி செய்து விட்டானே என்று கோபம் தனுஷுக்கு இருந்தது. அந்த படம் வெளியான பின்னராவது தனுசை சமாதானம் செய்யும் முயற்சியில் விக்னேஷ்சிவன் இறங்கி இருக்கலாம். ஆனால் விக்னேஷ் சிவன் அப்படி செய்யவில்லை. காரணம் என்னவென்றால், நயன்தாராவினுடைய காதலன் என்ற புகழ் வெளிச்சம் அப்போது அவருக்கு கிடைத்துவிட்டது. அந்த புகழ் வெளிச்சம் அவருக்கு இரண்டு கொம்புகளையும் கொடுத்து விட்டது. அத்தோடு நிற்காமல் தனுஷால் வளர்க்கப்பட்டவர்களை அவருக்கு எதிராகவே திருப்பி, தனுசுக்கு எதிராக சில வேலைகளையும் நயன்தாரா தரப்பு செய்தது. இதுவும் தனுசுக்கு மிகப்பெரிய கோபத்தை உண்டாக்கியது. இன்னும் ஒருபடி மேலே இவர்களுக்கு திருமணத்திற்கு தனுஷுக்கு ஒரு பத்திரிக்கை கூட அவர்கள் வைக்கவில்லை அந்த அளவுக்கு வன்மம் வளர்ந்து விட்டது. அந்த வன்மமே இப்போது தலைவிரித்தாடுகிறது” என்று பேசினார்.
டாபிக்ஸ்