Nayanthara: ‘6 மணி நேர தாமதம்.. அவ்வளவு அகங்காரம்… உங்களுக்கு கொம்பா முளைச்சிருக்கு.. இரண்டு பேருமே நோயாளிகள் - பிஸ்மி
Nayanthara: நயன்தாரா எப்போதும் தன்னை வாழ வைத்த மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு இந்த வாழ்க்கையை, பணத்தை, புகழை அந்தஸ்தை, கௌரவத்தை கொடுத்த சினிமா துறைக்கு அவர் நேர்மையாக இல்லை என்பது தான் உண்மையான விஷயம். - பிஸ்மி

பிரபல நடிகை நயன்தாரா அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்விற்கு அவர் சொன்ன நேரத்தில் இருந்து, 6 மணி நேரம் தாமதமாக சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதவர், நயன் நம்மை போன்று சாதரண மனிதர் கிடையாது என்று சொல்லி, அவர் தாமதமாக வந்ததை நியாப்படுத்த முயன்றார்.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்திருக்கிறார்.
விசுவாசமாக இருந்ததில்லை
அந்த பேட்டியில், ‘நயன்தாரா எப்போதும் தன்னை வாழ வைத்த மக்களுக்கு விசுவாசமாக இருந்ததில்லை; எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்கு இந்த வாழ்க்கையை, பணத்தை, புகழை அந்தஸ்தை, கௌரவத்தை கொடுத்த சினிமா துறைக்கு அவர் நேர்மையாக இல்லை என்பது தான் உண்மையான விஷயம்.
