தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush Sivakarthikeyan: ‘அமைதிப்படை அமாவாசையாக மாற்றிய சினிமா; தனுஷை தட்டித்தூக்கிய மீடியா மூளை - சிவா-தனுஷ் மோதல் கதை!

Dhanush Sivakarthikeyan: ‘அமைதிப்படை அமாவாசையாக மாற்றிய சினிமா; தனுஷை தட்டித்தூக்கிய மீடியா மூளை - சிவா-தனுஷ் மோதல் கதை!

Kalyani Pandiyan S HT Tamil
May 28, 2024 05:00 AM IST

Dhanush Sivakarthikeyan: “சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு கூட்டம் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதை கரெக்ட்டாக கணித்து, அவரை வைத்து ஒரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படம் தான் எதிர்நீச்சல்” - தனுஷ் - சிவா மோதல் கதை!

Dhanush Sivakarthikeyan: ‘அமைதிப்படை அமாவாசையாக மாற்றிய சினிமா; தனுஷை தட்டித்தூக்கிய சிவா! - சிவா தனுஷ் மோதல் கதை!
Dhanush Sivakarthikeyan: ‘அமைதிப்படை அமாவாசையாக மாற்றிய சினிமா; தனுஷை தட்டித்தூக்கிய சிவா! - சிவா தனுஷ் மோதல் கதை!

ட்ரெண்டிங் செய்திகள்

விசுவாசி சந்தானம்: 

இது குறித்து அவர் பேசும் போது, “நடிகர் தனுஷ் 3 படத்தை எடுக்கும் பொழுது அந்தப் படத்தில், நகைச்சுவைக்கென்று ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சந்தானத்தை கமிட் செய்து இருந்தார் தனுஷ். ஷூட்டிங் இரண்டு, மூன்று நாட்கள் நடந்து இருக்கும், திடீரென்று சிலம்பரசன் சந்தானத்தை அழைத்து, அந்தப் படத்தில் நடிக்கக்கூடாது. விலகி விடுங்கள் என்று சொல்லி விட்டார். விஜய் டிவியில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சிலம்பரசன்தான். அந்த விசுவாசத்திற்கான பிரதிபலனாக சந்தானம் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். 

திடீரென்று அவர் விலகிய பின்னர் தனுஷ் தற்போது அந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரும் விஜய் டிவியிலிருந்து சிலம்பரசன் சந்தானத்தை தேர்ந்தெடுத்தது போல, நாமும் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுத்தார். அப்போதுதான் சிவகார்த்திகேயனின் பெயர் அவரது காதிற்கு வருகிறது. இந்த நிலையில் தனுஷ் தரப்பிலிருந்து சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்கிறார்கள். சிவகார்த்திகேயன் அப்போது மெரினா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். 

பாண்டிராஜ் சொன்ன அட்வைஸ்

இந்த நிலையில், அந்த படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், 3 படத்தில் கமிட்டாக வேண்டாம். ஏனென்றால், மெரினா திரைப்படத்தில் ஹீரோ வேஷம். அந்த திரைப்படத்தில் காமெடி வேஷம். அந்தப் படத்தில் நீ நடித்தால், உன்னை காமெடியனாகவே முத்திரை குத்தி விடுவார்கள். ஆகையால் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் முழு கவனத்தை செலுத்து என்று அறிவுரை கூறினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. சிவகார்த்திகேயன் 3 படத்தில் கமிட் ஆகிவிட்டார். 3 படம் வெளியானது. 

தியேட்டரில் சிவகார்த்திகேயன் வரும் காட்சிகளை ரசிகர்கள் கைத்தட்டி கொண்டாடினர். இதையடுத்து தனுஷ் சிவகார்த்திகேயனுக்கென்று ஒரு கூட்டம் உருவாகி கொண்டு இருக்கிறது என்பதை கரெக்ட்டாக கணித்து, அவரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார். அந்த திரைப்படம் தான் எதிர்நீச்சல். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. காலப்போக்கில் நாம்தான் சிவாவை ஹீரோவாக்கி இருக்கிறோம். ஆகையால் அவர்  தன் பேச்சைக் கேட்டு தன் கைக்குள் இருப்பார் என்று தனுஷ் எதிர்பார்த்தார். 

ஆனால் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து,  தனுஷை அவர் நிராகரிக்கும் இடத்திற்கு சென்று விட்டார். இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் தனுஷின் அலுவலகத்திற்கு எதிரே, சிவகார்த்திகேயன் ஒரு அலுவலகம் வைத்து இருக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். சினிமா அப்படித்தான் அவரை உருவாக்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இது அமைதிப்படை அமாவாசை கதை போலதான்” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்