RIP Bijili Ramesh: செவி சாய்க்காத ரஜினிகாந்த்.. நிறைவேறாமல் போன பிஜிலி ரமேஷ் ஆசை.. மரணப் படுக்கையில் புலம்பல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bijili Ramesh: செவி சாய்க்காத ரஜினிகாந்த்.. நிறைவேறாமல் போன பிஜிலி ரமேஷ் ஆசை.. மரணப் படுக்கையில் புலம்பல்

RIP Bijili Ramesh: செவி சாய்க்காத ரஜினிகாந்த்.. நிறைவேறாமல் போன பிஜிலி ரமேஷ் ஆசை.. மரணப் படுக்கையில் புலம்பல்

Aarthi Balaji HT Tamil
Published Aug 27, 2024 09:44 AM IST

Bijili Ramesh: பிஜிலி ரமேஷ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது சிகிச்சைக்கு உதவ நிதி உதவி செய்ய அவரது சக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

Bijili Ramesh: செவி சாய்க்காத ரஜினிகாந்த்.. நிறைவேறாமல் போன பிஜிலி ரமேஷ் ஆசை.. மரணப் படுக்கையில் புலம்பல்
Bijili Ramesh: செவி சாய்க்காத ரஜினிகாந்த்.. நிறைவேறாமல் போன பிஜிலி ரமேஷ் ஆசை.. மரணப் படுக்கையில் புலம்பல்

அதைத் தொடர்ந்து, 2019ல் வெளியான இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ஆடை, பொன்மகள் வந்தாள் படத்தில் வெளியே தெரிய ஆரம்பித்தார். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ஒரு ரஜினிகாந்த் படத்தை கூட விடாமல் பார்த்துவிடுவார்.

பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சியில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து, தனது வாழ்வை பார்த்து கொண்டு வந்தார்.

பிஜிலி ரமேஷ் மறைவு

பிஜிலி ரமேஷ் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரது சிகிச்சைக்கு உதவ நிதி உதவி செய்ய அவரது சக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்தனர். பலரும் அதை பார்த்து உதவி செய்தார்கள்.

இருப்பினும் பிஜிலி ரமேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று ( ஆகஸ்ட் 26 ) இரவு 9.00 மணியளவில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே கடைசியாக அவர் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருந்தார். அவர் கூறுகையில், “ என் உடல்நிலை பற்றி எனக்கு நல்லவே தெரியும். என்னால சாப்பிடவே முடியல. ரொம்ப கஷ்டமாக தான் இருக்கிறது. குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு நான் ஒன்னும் பெரிய பிரயோஜனம் இல்லை. நான் அந்த தகுதியை இழந்துவிட்டேன். இந்த குதிரை எப்போது நிற்கும் என்று தெரியாது. ஓடினால் ஓடும். இல்லை நின்றுவிடும்.

குடிக்க வேண்டாம்

தினமும் 12 மணி நேரம் ஆகிவிட்டது என்றால் அதற்கு என்று ஒரு கூட்டமே அலைமோதும். ஒருவரிடம் சென்று குடிக்க வேண்டாம், நல்லது இல்லை என்று சொன்னால் கேட்க மாட்டார்கள். நீ போய் உன் வேலையை பார் என்று தான் சொல்வார்கள். அதானாலேயே சொல்ல கூடாது.

என் பிள்ளைகளை நினைத்தால் தான் கஷ்டமாக இருக்கிறது. நான் சென்ற பிறகு யார் அவர்களை யார் பார்ப்பார்கள் என்று நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது.

மரண படுக்கையில் பிஜிலி ரமேஷ் ஆசை

சினிமாவில் அனைவரிடமும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. குறிப்பாக என் தலைவன், ரஜினி. என்னுடைய மிகப்பெரிய ஆசையே ரஜினி சாருடன் நடிக்க வேண்டாம் என்று தான். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. " என்றார். மரண படுக்கையில் பிஜிலி ரமேஷ் பேசிய வீடியோ பார்வையாளர்களை வெகுவாக பாதித்து உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.