தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Biggboss7tamil: Poornima Says That She Will Go On Tour With Vishnu, So Maya And Vichitra Are Furious

BiggBoss7Tamil: ‘விஷ்ணு கூட தான் போவேன்.. போட்டு உடைத்த பூர்ணிமா’ வன்மத்தை கக்கிய மாயா, விசித்ரா!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 05, 2024 10:28 AM IST

Biggboss: ‘உண்மையோ, பொய்யோ பிரச்னை இருப்பது என்னவோ பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் தான். ஆனால், இதில் மாயாவுக்கு என்ன பிரச்னை? விசித்ராவுக்கு என்ன பிரச்னை? என்பது தெரியவில்லை.

BiggBoss7Tamil: பிக்பாஸ் வீட்டில் இன்று காலை நடந்த பரபரப்பான விவாதம்
BiggBoss7Tamil: பிக்பாஸ் வீட்டில் இன்று காலை நடந்த பரபரப்பான விவாதம் (Disney + Hotstar)

ட்ரெண்டிங் செய்திகள்

போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து, தங்கள் விருப்பமானவர்களின் பெயரை கூறி, அழைத்துச் செல்ல விரும்பும் இடத்தையும் கூறினர். அப்போது பூர்ணிமாவின் முறை வந்தது. கண்டிப்பாக அவர், மாயா, விசித்ரா உள்ளிட்டவர்களின் பெயரை தான் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அவர் எடுத்த எடுப்பில், விஷ்ணு உடன் ட்ரிப் போக வேண்டும் என்று விரும்பியதாக கூறினார். அத்துடன் தினேஷ் உள்ளிட்டோரின் பெயர்களையும் குறிப்பிட்டார். அதில் மாயா, விசித்ரா பெயர் இடம்பெறவில்லை. ‘யாரும் வராத காட்டு பகுதியாக அது இருக்கும்’ என்று தன்னுடைய விருப்பத்தை பூர்ணிமா தெரிவித்தார். அதை கேட்டு விஷ்ணுவுக்கே பயங்கர ஷாக். ‘என்னது ஆள் இல்லாத காடா.. எதுக்கு விட்டுட்டு வரவா?’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டார். ஆனால், மாயா மற்றும் விசித்ராவுக்கோ கோபத்தின் உச்சம். அதன் பின் போட்டி முடிந்து, அனைவரும் அங்கிருந்து சென்றனர். 

ஜிஸ்கொயர் பகுதியில் விசித்ரா, மாயா, பூர்ணிமா ஆகியோர் அமர்ந்தனர். எடுத்த எடுப்பில், ‘அவன் ஒரு ஆளு.. அவன் கூட ட்ரிப் போகணும்னு சொல்ற.. அவன் என்ன மன்மதனா? தான் ஒரு மன்மதன், அதனால் தான் தன்னுடன் ட்ரிப் போகணும்னு சொல்றா என அவன் நினைத்துக் கொண்டிருப்பான். அவன் ஒரு ஆளுனு, அவனை எதுக்கு நீ சொல்ற’ என்று பூர்ணிமாவை கடுமையாக சாடினார் மாயா. 

‘எதுக்கு அவன் பெயரை சொன்னா?’ என்று வழக்கமான தன்னுடைய அருவெறுப்பு ரியாக்‌ஷனை காட்டினார் விசித்ரா. இருவரும் மாறி மாறி எல்லை மீறி பேச, எதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார் பூர்ணிமா. ‘நீ என்ன நினைச்சு இப்படி பேசுற? நீ புருட்டல் பண்றது கூட தெரியாமல், அந்த லூசு இதை லவ்னு நெனப்பான் தெரியுமா?’ என்று மாயா கூற, ‘ஆமா ஆமா..’ என்று தன் பாணியில் ஒத்து ஊதினார் விசித்ரா. 

குற்றச்சாட்டுகள் அதிகரித்துக் கொண்டே போக, ‘தோன்றியதை சொன்னேன், ஸாரி..’ என, அதற்கு எண்ட் கார்டு போட்டார் பூர்ணிமா. போதாக்குறைக்கு, விசித்ரா காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டார். உண்மையோ, பொய்யோ பிரச்னை இருப்பது என்னவோ பூர்ணிமாவுக்கும் விஷ்ணுவுக்கும் தான். ஆனால், இதில் மாயாவுக்கு என்ன பிரச்னை? விசித்ராவுக்கு என்ன பிரச்னை? என்பது தெரியவில்லை. 

போட்டி நிறைவடையும் நிலையில் கூட, விஷமாக விஷ்ணுவை பார்க்கும் இவர்களின் குணம், மோசமான உதாரணம். இதெல்லாம் பொறுக்க முடியாமல் தான், ரூ.16 லட்சம் பணப்பெட்டியோடு புறப்பட்டாரா பூர்ணிமா? 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.