BiggBoss7 Tamil: ‘நீ போய்டு அர்ச்சு..’ விசித்ரா போட்ட திடீர் குண்டு.. நெருங்கிய பூர்ணிமா!
Bigg Boss Tamil: ‘அதன் பின், பிக்பாஸ்-ஸ்மால் பாஸ் தேர்வுக்காக ஷோபாவுக்கு வந்த விசித்ரா மற்றும் அர்ச்சனா அருகில் பூர்ணிமா வந்து அமர்ந்தார்’
சூடுபிடிக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், புதிய தலைவராக மீண்டும் தேர்வான தினேஷ், பிக்பாஸ்-ஸ்மால் பாஸ் வீடுகளை பிரிக்கும் வேலையை இன்று தொடங்கினார். அதன் படி, பூர்ணிமா, ஜோவிகா, விஷ்ணு, விக்ரம், விசித்ரா உள்ளிட்ட 6 பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்குச் செல்ல தேர்வு செய்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
மற்றவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க தேர்வாகினர். முன்னதாக கார்டன் ஏரியாவில் விச்சு உடன் அமர்ந்து அர்ச்சனா பேசிக் கொண்டிருந்தார். அப்போது , ‘கமல் சார், விதிமீறல் குறித்து பேசிய பிறகு, நீ பயந்துவிட்டாய் தானே?’ என்று கேட்டார். அதை ஆமோதிப்பது அமைதியாக, அவரைப் பார்த்து சிரித்தார் அர்ச்சனா. ‘சரி, முன்னப்பின்ன ரூல்ஸ் ப்ரேக் பண்ணியிருந்தா தானே?’ என்று விசித்ரா கேட்க, இருவரும் பயங்கரமாக சிரித்துக் கொண்டனர்.
‘‘இங்கே பாரு அர்ச்சனா.. எல்லாரும் ஃபெர்பக்ட்டா இருக்க முடியாது; நான் யாருக்கும் கட்டுப்படுற ஆள் இல்ல.. என்னை அடக்கவும் முடியாது. அதுக்காக நீ என் ரூட்ல வரணும்னு நினைக்காத. உனக்கு சில சந்தேகம் இருக்கு. அதை நீயே க்ளியர் பண்ணிக்கோ. என்னிடம் டிஸ்கஸ் பண்ணாத. நான் ஏதோ, உன்னை இயக்குறேன்னு சொல்றது உண்மையாகிடும். இது உன் கேம், நீ தான் விளையாடனும், விளையாடு. என்னிடம் மட்டும் இருக்காமல், எல்லாரிடமும் போய் பேசு, பழகு, ப்ரெண்ட்ஸ் ஆகு. அது தான், உன்னோட கேம்க்கு நல்லது,’’ என்று விசித்ரா கூற, அமைதியாக அதை கேட்டு சிந்தித்தார் அர்ச்சனா.
அதன் பின், பிக்பாஸ்-ஸ்மால் பாஸ் தேர்வுக்காக ஷோபாவுக்கு வந்த விசித்ரா மற்றும் அர்ச்சனா அருகில் பூர்ணிமா வந்து அமர்ந்தார். ‘நீ ஓகே தானே..’ என்று விசித்ரா கேட்க, பூர்ணிமா தலையசைத்தார். ‘சரி வாங்க..’ என்று, இருவரையும் வலது மற்றும் இடது புறமாக சாய்த்துக் கொண்ட விசித்ரா, அவர்களை குழந்தை போல கொஞ்சி மகிழ்ந்தார்.
இந்நிலையில் தான், பிக்பாஸ்-ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தினேஷ், பிரிவினை ஐடியாவை கையில் எடுத்திருப்பதாக அனைவருமே குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் வெடிக்கும் என்றே தெரிகிறது.
ஸ்மான் பாஸ் வீட்டுக்கு போகும் போது, ‘நானும் விச்சும் ப்ரெண்ட்ஸ் ஆகிடுவோம்..’ என்று பூர்ணிமா சொன்னார். அதை கேட்டு அமைதியாக இருந்த மாயா, சிறிது நேரம் கழித்து, ‘நானும் அர்ச்சனாவும் ப்ரெண்ட்ஸ் ஆகிடுவோம்’ என்று கூற, ‘ச்சீ.. அது மட்டும் நடக்க கூடாது’ என்று கூறி அங்கிருந்து புறப்பட்டார்.