தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Biggboss7 Tamil: Akshaya Is Back In The Bigg Boss House

BiggBoss7Tamil: ‘அவனை போட்டு கிழிங்க..’ அக்‌ஷயாவை அஸ்திரமாக்க நினைத்த மாயா..!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 10, 2024 11:47 AM IST

BiggBoss Akshaya: ‘ஆனால் மாயாவுக்கோ, வெளியில் இருந்து வரும் போட்டியாளர்கள், விஷ்ணுவை அட்டாக் செய்து, டேமேஜ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இருக்கிறது. அது விஷ்ணுவின் ஓட்டுகளை பாதிக்கும் என்கிற ஸ்டார்ட்டஜியை கையில் எடுக்கிறார் மாயா’

BiggBoss Tamil: பிக்பாஸ் போட்டியாளர்கள் அக்‌ஷயா மற்றும் மாயா.
BiggBoss Tamil: பிக்பாஸ் போட்டியாளர்கள் அக்‌ஷயா மற்றும் மாயா.

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் அக்‌ஷயா. இரண்டாவது நபராக நேற்று பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் அக்‌ஷயா. கடந்த முறை போல இல்லாமல், இந்த முறை வேறு அக்‌ஷயாவாக தெரிந்தார். வழக்கமாக அமைதிக்கு பதிலாக, ஆனந்தமாக காணப்பட்டார். இதையெல்லாம், முன்பு வந்த போதே செய்திருக்க வேண்டும். இருந்தாலும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு கூறப்பட்ட காரணங்களும் அவை தான்.

வெளியே சென்ற பின், அவரும் அதை உணர்ந்திருக்கிறார். அதனால் தான், ‘நான் அப்படி இல்லை, இப்படி தான்’ என்று உணர வைப்பதற்காக தன்னை ஜாலி பார்ட்டியாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார் அக்‌ஷயா. இருந்தாலும், அது நல்ல முடிவு தான்.

அவரது உடல்மொழி மாறியிருக்கிறதே தவிர, வெளியேறும் போது என்ன மனநிலையில் சென்றாரோ, அதே மனநிலையில் தான் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார் அக்‌ஷயா. அதே விஷ்ணு வெறுப்பு, மாயா ஆதரவு நிலைப்பாட்டோடு அவர் உலா வருவதை அறிய முடிகிறது.

மாயா உடன் சென்று தனியாக பேசுவது, விஷ்ணு, தினேஷ், மணி தன்னிடம் பேசியதை மாயாவிடம் கமெண்ட் செய்வது என, பழயை அக்‌ஷயாவின் மனநிலை கொஞ்சமும் மாறவில்லை. ஆனால், அவரிடம் ஒரு குவாலிட்டியை பார்க்க முடிந்தது. தனக்கு விஷ்ணுவிடம் நிறைய கேள்விகள் இருப்பதாகவும், தான் அதை கேட்க இது சரியான நேரம் இல்லை என்றும் மாயாவிடம் பலமுறை கூறிவிட்டார் அக்‌ஷயா. காரணம், தன்னுடைய கேள்விகள் அல்லது சந்தேகங்கள், விஷ்ணுவின் ஓட்டுகளை பாதிக்க கூடாது என்று அவர் எண்ணுகிறார். சரியோ தவறோ அந்த வகையில் அக்‌ஷயாவின் எண்ணம் பாராட்டத்தக்கது.

ஆனால், அதையும் தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார் மாயா. நேற்று இரவு மாயாவிடம் இவற்றை அக்‌ஷயா கூறிக் கொண்டிருக்கும் போது, ‘இன்னும் 6 நாள் தான் இருக்கு.. நீயெல்லாம் ஒரு ஆளானு அவனிடம் கேளுங்க’ என்று விஷ்ணுனை நோக்கி அக்‌ஷயா எனும் அஸ்திரத்தை திருப்ப முயற்சிக்கிறார் மாயா. ஆனால், அக்‌ஷயா அந்த விசயத்தில் கொஞ்சம் தெளிவாகவே இருக்கிறார். ‘நான் இந்த 6 நாள் என்ஜாய் பண்ணலாம்னு வந்திருக்கிறேன்.. எதுக்கு இதைப் போய் கேட்டுட்டு’ என்று மாயாவின் தந்திரவலையை தவிர்த்தார் அக்‌ஷயா.

ஆனால் மாயாவுக்கோ, வெளியில் இருந்து வரும் போட்டியாளர்கள், விஷ்ணுவை அட்டாக் செய்து, டேமேஜ் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இருக்கிறது. அது விஷ்ணுவின் ஓட்டுகளை பாதிக்கும் என்கிற ஸ்டார்ட்டஜியை கையில் எடுக்கிறார் மாயா. உண்மையில் அவருக்கு, அர்ச்சனா, தினேஷ், மணி வெல்வதை விட, தன்னை விட குறைந்த ஓட்டுகளே விஷ்ணு பெற வேண்டும் என்கிற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

அதை நோக்கி தான், விஷ்ணுவை டார்க்கெட் செய்து தொடர்ந்து வார்த்தைகளை பிரயோகிக்கிறார் மாயா. அந்த வகையில் அக்‌ஷயாவை வைத்து மாயா ஆட நினைத்த முதல் அஸ்திரம் வேலை செய்யவில்லை. இருந்தாலும், இன்னும் சிலர் வருவார்கள், ஆதரவு தருவார்கள் என்று காத்திருக்கிறார் மாயா.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.