Biggboss Tamil 8: ‘திரைக்கு முன்பு இருந்த தரையே ஈரமாகிடுச்சு’ தொடங்கியது அழுகாட்சி.. முத்து மற்றும் மஞ்சரி கண்ணீர்!
முத்துக்குமரன், தன் பெற்றோர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஒரு பேரிச்சை பழத்தை வைத்து, தன் தாய் மீதான பாசத்தை பகிர்ந்து கொண்டார். இதில், மஞ்சரி, தன்னுடைய மகன் மற்றும் தாய், தன் துணை பற்றி பேசி, உடைந்து அழுதார். அவரின் பேச்சு, போட்டியாளர்களையும் கலங்கும்படியாக இருந்தது

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, 75 நாட்களை கடந்து நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வாரம், ஃப்ரீஸிங் டாஸ்க் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதற்கான ஃவைப், முன்கூட்டியே கூட்ட, பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று ஒரு டாஸ்க் தரப்பட்டது. காலையில் அனைத்து போட்டியாளர்களையும், வழக்கமான திரைக்கு முன்பு அமர வைத்த பிக்பாஸ், ‘நீங்கள் யாரை எல்லாம் மிஸ் பண்றீங்க?’ என்று பேசுமாறு பிக்பாஸ் அழைத்தார்.
தொடங்கியது அழுகாட்சி
அனைவரும், அவரவர் தரப்பில் எதையெல்லாம் மிஸ் செய்கிறோம் என்று வழக்கம் போல, கண்ணீரும், சிரிப்புமாக சொல்லி அழுது, திரைக்கு முன்பு இருந்த தரையை ஈரமாக்கினர். அதிலும், பெண் போட்டியாளர்கள், தங்கள் மிஸ் செய்யும் படலத்தை தங்களுக்கே உரிய பாணியில் சொல்லி முடித்து, அவர்களும் அழுது, அதை காண்போரையும் அழ வைத்தனர்.
முத்துக்குமரன் மற்றும் மஞ்சரி வீடியோ
முத்துக்குமரன், தன் பெற்றோர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஒரு பேரிச்சை பழத்தை வைத்து, தன் தாய் மீதான பாசத்தை பகிர்ந்து கொண்டார். இதில், மஞ்சரி, தன்னுடைய மகன் மற்றும் தாய், தன் துணை பற்றி பேசி, உடைந்து அழுதார். அவரின் பேச்சு, போட்டியாளர்களையும் கலங்கும்படியாக இருந்தது.