Biggboss 7 Tamil: வந்தது முதல் பூகம்பம்.. கலக்கத்தில் கதறும் ரசிகர்கள்
பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கான இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் 7 ஆவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வரப்போகிறார்கள். ஆனால் புதிய ட்விஸ்டாக புது போட்டியாளர்களுக்கு பதிலாக ஏற்கனவே எவிக்ஷன் செய்யப்பட்டு அனுப்பட்டு இருக்கும் போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் வர இருக்கிறார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த முறை வினுஷா, விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் தற்போது முதல் பூகம்ப டாஸ்க் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மேதையில் இருக்கும் பந்தை சரி சமம் செய்து கூடையில் விழ வைத்தாக் வெற்றி என அறிவிக்கப்பட்டது. அந்த டாஸ்க்கை விஷ்ணு மற்றும் தினேஷ் விளையாடுகின்றனர்.
ஆனால் இருவரும் அந்த டாஸ்க்கில் ஜெயிக்க முடியாமல் திணறினார்கள். அடுத்தடுத்து விஷ்ணு, பிரவோ, அர்ச்சனா ஆகியோர் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து வெளியே இருந்து உள்ளே வரும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை எப்படி விளையாட போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
முதல் பூகம்பம் டாஸ்க்கில் போட்டியாளர்கள் சரியாக விளையாடவில்லை என்பது மட்டும் நிச்சயம்.
வினுஷா உள்ளே வந்தால் நிச்சயம் நிக்சன் விளையாட்டு பாதிக்கப்படும். ஏனென்றால் வினுஷா பற்றி நிக்சன் ,“அவர் ஒரு வேலைக்காரி. அவ என்னோட டைப் இல்ல. ஒரு ஒருத்தங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும். எனக்கு வந்து உடலழகு சரியாக இருக்க வேண்டும்.
வினுஷா தேவிக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு அழகா இருக்கு. ட்ரெஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு. அது ஓகே. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரி பெர்ஃபெக்டா இருக்கணும்’ என பேசினார். இது பெரும் சர்ச்சையான நிலையில் வினுஷாவிற்கு, நிக்சன் மேல் கோபம் இருக்கிறது.
அதே போல் விஜய் வர்மா ஸ்டார்ங் போட்டியாளர். அவர் உள்ளே வந்தாலும் வரும் வாரங்களில் கடுமையான டஃப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.