Biggboss 7 Tamil: ‘பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர்கள்’ தினேஷ் முடிவால் திருப்பம்!
BiggBoss 7 Tamil: ‘இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும், தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர்’
பிக்பாஸ் வீட்டில் புதிய தலைவராக பொறுப்பேற்ற தினேஷ், இதுநாள் வரை வீட்டில் கூட்டணியாக இருந்தவர்களை பிரிக்க ஒரு ப்ளான் போட்டார். அதன் படி, விஷ்ணு, ஜோவிகா, விக்ரம், ப்ராவோ, பூர்ணிமா, விசித்ரா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து, ஸ்மால் பாஸ் வீட்டிற்கு தேர்வாகினர். அவர்கள் அனைவரும் உடனடியாக, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற பிக்பாஸ் உத்தரவிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும், தங்களின் உடமைகளை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் கோலோச்சிய பூர்ணிமா, ஜோவிகா, விக்ரம் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியோடு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அதற்காக எண்ட்ரி ஏரியாவில் இருந்து, ஊர்வலமாக சென்ற அந்த பேரும், தங்கள் கதவை மூடிக் கொண்டனர். அப்போது, ‘நீங்கள் யாரும் இந்த கேட்டை விட்டு வெளியே வரக் கூடாது’ என்று கேப்டன் தினேஷ் கூற, ‘தயவு செய்து நீங்களும் உள்ளே வந்திடாதீங்க’ என்று பூர்ணிமா கடுப்போடு கூறிக் கொண்டு உள்ளே சென்றார்.
உள்ளே வந்ததுமே, ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள், மதிய உணவுக்கான வேலையை தொடங்கினர். அதன் பின்பாக நாமினேஷன் பணிகள் தொடங்க உள்ளது. இந்த முறை, பிக்பாஸ் நாமினேஷனில் புதிய ரூல் ஒன்றை போட்டுள்ளார். வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 3 போட்டியாளர்கள் உள்ளே வந்து, தற்போதுள்ள போட்டியாளர்களிடம் மோதுவார்கள் என்றும், வெற்றி பெறுபவர்கள் தான் வீட்டில் இருப்பார்கள் என்றும் அறிவித்துள்ளார். இது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையாக வருத்தத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.