Bigg Boss 7 Tamil: ‘யம்மா… எவ்வளவு டாக்சிக்.. கடுப்பாகுது’ - தினேஷை குறிவைத்த அர்ச்சனா!
பிக்பாஸ் வீட்டிற்குள் எல்லா சீசன்களிலும் இடம் பெற்ற, பணப்பெட்டி நுழைந்திருக்கிறது. ஆகையால் போட்டியாளர்களுக்கு இடையே எவ்வளவு பணம் கிடைத்தால் எடுத்து செல்லலாம் தொடர்பான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மணியும், அர்ச்சனாவும் தினேஷை பற்றி பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 -ன் வின்னர் யாரென்று தெரிந்து விடும்.
பிக்பாஸ் வீட்டிற்குள் எல்லா சீசன்களிலும் இடம் பெற்ற, பணப்பெட்டி நுழைந்திருக்கிறது. ஆகையால் போட்டியாளர்களுக்கு இடையே எவ்வளவு பணம் கிடைத்தால் எடுத்து செல்லலாம் தொடர்பான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மணியும், அர்ச்சனாவும் தினேஷை பற்றி பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதில் அர்ச்சனா தினேஷ் மிகவும் டாக்சிக்காக இருப்பதாக சொல்ல, மணி விளையாட்டுக்கு பேசுகிறோம், விளையாட்டுக்கு பேசுகிறோம் என்ற பெயரில் பேசுகிறார்கள். ஆனால் அது ஒரு கட்டத்தில் டாக்சிக்காக மாறி விடுகிறது. அது இருக்கட்டும், தினேஷ் ஏன் உன்னை எப்பொழுதும் நக்கலாகவே பேசுகிறார் என்று கேட்க, ஆமாம் அது சமீப காலமாக மிகவும் அதிகமாக ஆகியிருக்கிறது என்று சொல்கிறார்.
இதனை தொடர்ந்து பேசிய மணி, அவருக்கும் எனக்குமான உரையாடல்கள் கருத்து வேறுபாடாக மாறி இருக்கிறது. அதை நான் அவரிடம் மிகவும் ஓப்பனாகவே சொல்லி இருக்கிறேன். எனக்கு இந்த மாதிரியான விஷயங்கள் பிடிக்காது.
அதனை தொடர்ந்து பேசிய அர்ச்சனா, எனக்கு இப்போதெல்லாம் இங்கு வந்து உட்கார்வதற்கே பயமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஒரு அசெளகரியமான சூழ்நிலை எனக்குள் உருவாகிறது. காரணம் அவர் ஏதாவது குதர்க்கமாக பேசுவார்.
நல்ல மனிதன்தான்… ஆனால், ஏன் இப்படி செய்கிறார் என்று தான் தெரியவில்லை. பணப்பெட்டியை யார் எடுத்தால் என்ன எடுக்காவிட்டால் என்ன, பிறரை மூளைச்சலவை செய்து எடுக்க வைப்பது உங்களுடைய வேலை கிடையாது அல்லவா?
எனக்கு அது மிகவும் டாக்சிக்காக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கடுப்பாகிறது என்றார்.

டாபிக்ஸ்