எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது.. ஆர்.ஜே. ஆனந்தி போட்ட பதிவு.. குவியும் பாராட்டு!
எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது. மேலும், என்னால் ஒருவரின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்க முடியாது என ஆர்.ஜே. ஆனந்தி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் யாருமே எதிர்பாராத வகையில் முந்தைய வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றிருக்கிறது. இதில் சாச்சனா மற்றும் ஆர்.ஜே. ஆனந்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சீசனில் முதல் எட்டாவது வாரம் டபுள் எவிக்ஷனே நடக்காமல் இருந்த நிலையில், 9-ஆவது வாரத்தில் டபுள் எவிக்ஷன் என அறிவித்தார் விஜய் சேதுபதி. அதன்படி அடுத்தடுத்து சாச்சனா, ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரை எலிமினேட் ஆனார்கள். முதலில் ஆர்.ஜே.ஆனந்தியை தான் எலிமினேட் செய்தார் விஜய் சேதுபதி. அவர் பெயர் எலிமினேஷன் கார்டில் வந்ததை பார்த்ததும் போட்டியாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
எனது ஓட்டும் கருத்துக்களும் விற்பனைக்கு கிடையவே கிடையாது
இப்படியான நிலையில், எவிக்ட் ஆன போட்டியாளர் ஆனந்தி தனது எக்ஸ் பக்கத்திலும் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் தனது பதிவில், " மிகவும் விஷமத்தனமான எண்ணம் கொண்டவர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேதான் இருக்கின்றார்கள். ஆனால் போட்டியாளர்கள் மத்தியில் இப்படியான விஷமத்தனமான எண்ணங்கள் இல்லவே இல்லை. மேலும் போட்டியாளர்கள் வில்லன்கள் கிடையாது, அதேநேரத்தில் கதாநாயகர்களும் கிடையாது. அவர்கள் தவறு செய்யக் கூடிய சாதாரண மனிதர்கள். '