Bigg boss 7 Tamil: ‘பூர்ணிமாட்ட இன்னும் பேசல.. சில விஷயங்களுக்கு நேரம், காலம்..’ - விஷ்ணு ஓப்பன் டாக்!
உண்மையில் நான் இன்னும் பூர்ணிமாவிடம் பேசவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். சில விஷயங்களுக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுகு போல சக போட்டியாளர்களிடம் பொரிந்து தள்ளியவர் போட்டியாளர் விஷ்ணு. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் போது, இவருக்கும் பூர்ணிமாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. அதனை சகப்போட்டியாளர்களும் கிண்டல் செய்தனர்.
ஆனால் நாளடைவில் விஷ்ணு பூர்ணிமாவிற்கு எதிராக திரும்ப, காதல் வன்மமாக மாறியது. பூர்ணிமா 16 லட்சத்தை எடுத்து விட்டு வெளியே சென்று மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வரும் போது அதனை சைகை மொழியிலும் விஷ்ணுவிடம் வெளிப்படுத்தினார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விஷ்ணு அண்மையில் பேசி இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்னர் எனக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. பிக் பாஸ் வீட்டை பொருத்தவரை எல்லோருமே உண்மையாகத்தான் இருந்தார்கள். அது கோபம், அன்பு, வன்மம் என எதுவாக இருந்தாலும் சரி, அதில் உண்மை இருந்தது.
உண்மையில் நான் இன்னும் பூர்ணிமாவிடம் பேசவில்லை. அது ஏன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். சில விஷயங்களுக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும்.
வீட்டுக்குள் இருந்தபோது சில விஷயங்களில் அவருக்கும் எனக்கும் கோபம் உண்டானது. கருத்து வேறுபாடுகள் வந்தது. வெளியே வந்த பிறகு இன்னும் நான் எனக்கான நேரத்தில்தான் இருக்கிறேன்.உள்ளே நடந்த பிரச்சினைகளை சரி செய்ய இன்னும் நேரம் கிடைக்கவில்லை. ஆகையால் இன்னும் அவரிடம் நான் பேசவில்லை.
பிக் பாஸ் வீட்டிற்குள் நான் சென்றபோது அங்கு இருந்த பிரதீப் மிகவும் வலிமையான போட்டியாளர் என்பது எனக்கு தெரிந்தது. மாயா, தினேஷ், விசித்திரா, அர்ச்சனா உள்ளிட்டோர் எனக்கு வலிமையான போட்டியாளர்களாக தெரிந்தனர்.
அர்ச்சனாவிடம் இருந்து ஒரு அக்கறை ஒன்று வெளிப்படும். உண்மையில் நல்ல விஷயம். அதேபோல எனக்கு கூல் சுரேஷ் அண்ணனையும் மிகவும் பிடிக்கும். காரணம் என்னவென்றால், அவர் ஆரம்பத்தில் இருந்து எனக்கு உறுதுணையாக இருந்தார் அவரிடம் நாம் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். எடை போட மாட்டார். அதேபோல சரியான விஷயங்களை பேசுவதற்கு எனக்கு வழிகாட்டுவார்.
வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை நான் பிக் பாஸ் வீட்டில கற்றுக் கொண்டேன். பத்தாயிரம் வாலாவை வெடிப்பேன் என்று சொன்னேன். அதேபோல வெடித்து விட்டேன்” என்று பேசினார்.
டாபிக்ஸ்