உங்க அன்புக்கு அவன் தகுதி இல்லை.. தயவு செய்து விஷால் கிட்ட பேசாதீங்க.. தர்ஷிகா போட்ட பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உங்க அன்புக்கு அவன் தகுதி இல்லை.. தயவு செய்து விஷால் கிட்ட பேசாதீங்க.. தர்ஷிகா போட்ட பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

உங்க அன்புக்கு அவன் தகுதி இல்லை.. தயவு செய்து விஷால் கிட்ட பேசாதீங்க.. தர்ஷிகா போட்ட பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

Divya Sekar HT Tamil
Dec 31, 2024 09:35 AM IST

தர்ஷிகா கருப்பு நிற உடையில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றன.

உங்க அன்புக்கு அவன் தகுதி இல்லை.. தயவு செய்து விஷால் கிட்ட பேசாதீங்க.. தர்ஷிகா போட்ட பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
உங்க அன்புக்கு அவன் தகுதி இல்லை.. தயவு செய்து விஷால் கிட்ட பேசாதீங்க.. தர்ஷிகா போட்ட பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

என்னுடைய பாசம் வேசமில்லை

முன்னதாக தர்ஷிகா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், 'பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின், நிறைய மனவலியாக இருக்கிறது. ரொம்பவே கஷ்டமா இருக்கிறது. நான் ஒரு ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்திருக்கிறேன். என்னை விளையாட்டில் அடிக்க முடியாது. அதேநேரத்தில் பாசத்தில் அடிக்க முடியும். பிக்பாஸ் வீட்டில் என்னுடைய பாசம், வேசமில்லை. வெளியே வந்த பிறகு தான், உள்ளே வேசம் நடந்தது எனக்கு தெரிந்தது. ஒரு நடிகையாக நான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றேன், ஆனால், அங்கே என்னிடம் நடத்த சிறந்த நடிகராக VJ விஷாலை சொல்வேன்.

வீட்டுக்குள் இருந்த போது, பவித்ரா என்னிடம் சொன்னவற்றை நான் கேட்காமல் இல்லை. திரும்ப திரும்ப அதை யோசித்துக் கொண்டே தான் இருந்தேன். அதை உணர்ந்து, திருத்தி, விளையாட முயற்சிக்கும் போது வெளியே வந்துவிட்டேன். அந்த ஸ்கூல் டாஸ்க் இல்லை என்றால், கண்டிப்பாக நான் வீட்டில் இருந்திருப்பேன். எந்த காதல் கன்டண்ட்டுக்கும் சொல்லி அனுப்பப்பட்டது அல்ல. அதுவாக நடந்தது தான்.

எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை

VJ விஷால், என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னதை வெளியில் வந்து பார்த்தேன். அதே விஷால் என்னிடம், நான் அழகாக இருப்பதாக பலமுறை கூறியிருக்கிறான். என் முன்னால் பேசியதை நம்புவதாக, என் பின்னால் போய் பேசியதை நம்புவதா, எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. எது நீ என்பதே எனக்கு தெரியவில்லை. அவர் சொல்வதால், நான் அப்படி ஆக மாட்டேன். அழகு முகத்தில் இல்லை, உள்ளே இருப்பதை நீ வெளிப்படுத்தும் விதத்தில் தான் அழகு இருக்கிறது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்தவாரன் அன்ஷிதா வெளியேறினார். அப்போது விஷால் அவரிடம் நான் எப்போதும் உனக்கு துணையாக நிற்பேன் இதை நான் தர்ஷிகா-விடம் கூட சொன்னதில்லை என அன்ஷிதா-வுக்கு சையின் பரிசளித்தார்.

சோகமாக இருக்கும் தர்ஷிகா

இந்நிலையில் தற்போது தர்ஷிகா கருப்பு நிற உடையில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றன. இது மட்டும் இல்லாமல் நீங்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்றால் விஷாலை கேள்வி கேட்க வேண்டும்,தயவு செய்து விஷால் கிட்ட பேசாதீங்க, நேற்றைய எபிசோட் எனக்கு கஷ்டமா இருந்து சிஸ் சோ, விஷால் கிட்ட இருக்கிற உங்க அம்மா ரிங்  வாங்கிருங்க உங்க அன்புக்கு அவன் தகுதி இல்லை.. ஸ்ட்ராங்காக இருங்க ..விஷால் தான் உங்களுக்கு ஃபீலிங்ஸ் வர மாதிரி ஸ்பேஸ் குடுத்துத்தான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் மூன்று வாரத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, மஞ்சரி ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்

முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா,ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஜெஃப்ரி, அன்ஷிதா வெளியேற்றப்பட்டனர்.

84 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் மூன்று வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.