Bigg Boss Tamil: ‘எனக்காக யாருமே இப்படி நின்னதில்ல’ - விசித்ராவை நினைத்து நெகிழ்ந்த அர்ச்சனா!
விசித்ரா தன்னுடைய எதிரி ஜோவிகா என்று கூறியிருக்கிறார்.
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிரதீப் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் மாயா, ஜோவிகா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் அதற்கு எதிரான கருத்தை தெரிவித்த விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோரை கடுமையாக சாடினர்.
குறிப்பாக கடந்த வார கேப்டனாக இருந்த மாயா, கேப்டன் என்ற தோரணையில் வாய்க்கு வந்த படியெல்லாம் விசித்ராவையும், அர்ச்சனாவையும் பேசி படாதபாடு படுத்தினார். கூடவே ஜோவிகா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் இணைந்து அவர் மீது அம்புகளை எய்தனர்.
இதில் விசித்ரா தன்னுடைய முதிர்ச்சியால் அதனை சரியாக கையாண்டாலும், அர்ச்சனாவால் அதனை சமாளிக்க முடியவில்லை. இதனால் அவர் பலமுறை உடைந்து அழுதார். ஆனால், அதனையும் விட்டு வைக்காத புல்லி கேங் அர்ச்சனாவின் மன அரோக்கியத்தை குறி வைத்து கிண்டல் செய்தது.
ஆனால் எல்லா காலக்கட்டங்களிலும் விசித்ரா அர்ச்சனாக்கு உறுதுணையாக இருந்து அவரை தேற்றி, புல்லி கேங்கிடம் இருந்து அவர்களை காப்பாற்றினார்.
இந்த நிலையில் வார இறுதியில் வந்த கமல், புல்லி கேங்கை அவர்களின் நடவடிக்கைகளுக்காக வெளுத்ததோடு, விசித்ராவை பாராட்டினார். இந்த நிலையில் இன்றைய புரமோ வெளியாகி இருக்கிறது. அந்த புரமோவில், உங்களுடைய நண்பர்களுக்கு நீங்கள் லட்டு வழங்க வேண்டும் என்று கூறிய உடன், அர்ச்சனா என்னுடைய வாழ்க்கையில் யாரும் எனக்காக இப்படி நின்றதில்லை என்று நெகிழ்ச்சியாக கூறி விசித்ராவிற்கு வழங்கினார்.
இதனையடுத்து வந்த பூர்ணிமா, அர்ச்சனாவிடம் லட்டு கொடுத்து நான் உன்னிடம் இந்த வாரம் நல்ல நட்பை எதிர்பார்ப்பதாக கூறினார். அடுத்ததாக ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ் ரெட் ட்ரேவில் உள்ள லட்டை உங்கள் எதிரிக்கு கொடுக்க வேண்டும் என்று சொல்ல, விசித்ரா ஜோவிகாவிற்கு அதனை கொடுத்தார். அதனைத்தொடர்ந்து வந்த ஜோவிகா சில இடங்களில் விசித்ரா காட்டும் பாசம் போலியாக இருக்கிறது என்று கூறி, எதிரிக்கான லட்டை அவருக்கு கொடுத்தார். ஆகையால் இன்று சம்பவம் காத்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
டாபிக்ஸ்