Bigg Boss Tamil: டைட்டில் வின்னர் விக்ரம் இல்ல.. இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil: டைட்டில் வின்னர் விக்ரம் இல்ல.. இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

Bigg Boss Tamil: டைட்டில் வின்னர் விக்ரம் இல்ல.. இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

Aarthi V HT Tamil
Nov 19, 2023 12:12 PM IST

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுகிறார் என பார்க்கலாம்.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

கடந்த ஒரு வாரத்தில் போட்டியாளர்களின் செயல்களுக்காக கமல் ஹாசன் பாடம் நடத்துவார் என்பதால் அனைவரின் பார்வையும் வார இறுதி எபிசோடில் உள்ளது. வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் பெயரையும் இறுதி வாரத்தில் தான் அறிவிப்பார்.

கடந்த வாரம், ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது நீக்கம் நிக்சனை உணர்ச்சிவசப்பட வைத்தது. பிக் பாஸ் தமிழ் 7 வீட்டில் இருந்து தனது நண்பர் வெளியேறியதற்கு விசித்ரா தான் காரணம் என குற்றம் சாட்டினார். 

அவர்களின் வளர்ந்து வரும் நெருக்கத்தை கருத்தில் கொண்டு, நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் திறன் ஐஷுவுக்கு இருப்பதாக அவர் நம்பியதால் வருத்தமடைந்தார்.

இதனையடுத்து இந்த வாரம் ஒன்றல்ல, இருவரல்ல, எட்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள்.

விசித்ரா, ரவீனா தாஹா, மணிச்சந்திரா, பூர்ணிமா, ஆர்ஜே பிராவோ, கானா பாலா, அக்‌ஷயா உதயகுமார் மற்றும் சரவண விக்ரம் ஆகியோர் பிக் பாஸ் ஏழாவது வாரத்தில் வெளியேற்றப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்படுவார் என சொல்லப்படுகிறது.

இறுதி வாக்களிப்பு போக்குகளின் படி, விசித்ரா பார்வையாளர்களிடமிருந்து அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ளார். கடைசி மூன்று இடங்களில் கானா பாலா, அக்‌ஷயா, விக்ரம் ஆகியோர் உள்ளனர். 

இதில் மக்களின் மனதை குறைவாக கவர்ந்தர்கள் என்ற அடிப்படையில் கானா பாலா வெளியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.