Soundariya Propose : ‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..’ பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் காதலை சொன்ன சவுந்தர்யா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Soundariya Propose : ‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..’ பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் காதலை சொன்ன சவுந்தர்யா!

Soundariya Propose : ‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..’ பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் காதலை சொன்ன சவுந்தர்யா!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 27, 2024 02:37 PM IST

Soundariya Propose : ‘நீ பாட்டுக்கு இப்படி பண்ணிட்ட.. உங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது? அவர் என்ன நினைப்பாரு’ என்று விஷ்ணு பயத்தை தெரிவித்தார். ‘இங்கே பாரு.. நீ அதை பத்தி பயப்படாத.. அப்பாவ நான் பாத்துக்குறேன்’ என்று சமாதானம் செய்தார் சவுந்தர்யா.

‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..’ பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் காதலை சொன்ன சவுந்தர்யா!
‘என்னை கல்யாணம் பண்ணிக்கோ விஷ்ணு..’ பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் காதலை சொன்ன சவுந்தர்யா! (Disney+ Hotstar)

சவுந்தர்யா நண்பராக, முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் விஷ்ணு, வீட்டிற்குள் வந்தார். போட்டியாளர்கள் அனைவரையும் அவர்களை வரவேற்று, வழக்கம் போல மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். வழக்கத்திற்கு மாறாக, சவுந்தர்யா முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது. அவரது குடும்பத்தார் வரும் போது கூட, அவரை அவ்வாறு பார்க்க முடியவில்லை.

அப்பாவிடம் அனுமதி வாங்கிய சவுந்தர்யா

அனைவரும் விஷ்ணு உடன் பேசிக் கொண்டிருந்த போது, ஜெஃப்ரி உடன் கேமரா முன் சென்ற சவுந்தர்யா, தயங்கி தயங்கி கேமரா முன் பேசத் தொடங்கினார். அது அவரது அப்பாவிற்கான செய்தியாக இருந்தது. ‘அப்பா.. நீங்க வரும் வரும் போது, நான் உங்களிடம் ஒன்று கூறலாம் என்று இருந்தேன். எனக்கு விஷ்ணுவை ரொம்ப பிடிக்கும். உங்களிடம் அது பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறேன். அம்மாவிடம் தெரிவித்திருக்கிறேன். இந்த தருணம், அவர் உள்ளே வந்திருக்கிறார். எனக்கு தன்னம்பிக்கை நிறைய வந்திருக்கு. அவரிடம் என் காதலை சொல்லலாம் என்று நினைக்கிறேன். உங்கள் அனுமதியோடு அதை செய்யலாம் என்று நினைக்கிறேன். எனக்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று அப்பாவிடம் அனுமதி கேட்டார் சவுந்தர்யா.

தன் காலை எழுத்து வடிவியில் வெளிப்படுத்திய சவுந்தர்யா
தன் காலை எழுத்து வடிவியில் வெளிப்படுத்திய சவுந்தர்யா

காதலை சொன்ன சவுந்தர்யா

அதற்குள், வீட்டார் சேர்ந்து, ‘மேரி மீ’ என்று மாவில் செய்திருந்த ஒரு வடிவத்தை தட்டில் வைத்து, சவுந்தர்யாவிடம் கொடுத்தனர். திட்டமிட்ட படி, விஷ்ணுவை, அருண் வெளியே அழைத்து பேசிக் கொண்டிருந்த போது, வெட்கத்தோடு தன் வீட்டு நண்பர்களை அழைத்து வந்த சவுந்தர்யா, நீண்ட தயக்கத்திற்குப் பின், விஷ்ணு முன் மண்டியிட்டு, தன் கையில் இருந்த, ‘மேரி மீ’ என்பதை கொடுத்து, ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னார் சவுந்தர்யா.

அதை சற்றும் எதிர்பாராத விஷ்ணு, ஒரு நிமிடம் அப்படியே ஷாக் ஆனார். ‘என்னடா ஏதாவது சொல்லு..’ என சவுந்தர்யா கேட்க, அவரை தூக்கிவிட்ட விஷ்ணு, ‘ஐ லவ் யூ டூ’ என்று கூறி, மீண்டும் ஷாக் ஆனார். ‘எனக்கும் பிடிக்கும் தான்.. ஆனால், இந்த சர்ப்ரைஸ்.. உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தான் நான் வந்தேன்.. எனக்கே குடுக்குறீங்களேடா..’ என்று புலம்பிக் கொண்டு, சவுந்தர்யாவை கட்டி அணைத்தார் விஷ்ணு.

காதலை சொன்னதும் சவுந்தர்யாவை கட்டி அணைத்த விஷ்ணு
காதலை சொன்னதும் சவுந்தர்யாவை கட்டி அணைத்த விஷ்ணு

பயந்து நடுங்கிய விஷ்ணு

அதன் பின் சவுந்தர்யாவிடம் பேசிய விஷ்ணு, ‘சரி எல்லாம் நல்லது தான், இப்போதைக்கு போட்டியை பாரு.. வெளியே வந்த எல்லாத்தையும் பாத்துக்கலாம்’ என்று கூறினார். அதன் பின், வெளியே செல்லும் முன், ‘நீ பாட்டுக்கு இப்படி பண்ணிட்ட.. உங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்றது? அவர் என்ன நினைப்பாரு’ என்று விஷ்ணு பயத்தை தெரிவித்தார். ‘இங்கே பாரு.. நீ அதை பத்தி பயப்படாத.. அப்பாவ நான் பாத்துக்குறேன்.. நீ பயப்படாம இரு.. என் ஆசைக்கு என் அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு’ என்று அவரை சமாதானம் செய்தார் சவுந்தர்யா. பிக்பாஸ் தமிழ் வரலாற்றில், வீட்டில் முதன் முதலாக காதலை பகிர்ந்த இந்த சம்பவத்தை, வீட்டிலிருந்த போட்டியாளர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.