சூடுப்பிடித்த ஆட்டம் .. ரயானுக்கு ஏற்பட்ட அடி.. அருணை அசால்ட்டாக கேமை விட்டு தூக்கிய முத்து.. போட்டோவை எரித்து மாஸ்!
இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கு தொடங்கி இருக்கிறது. நெருப்பு குழி என்ற இந்த டாஸ்க்கில் முத்துகுமரன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் மூன்று வாரத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, மஞ்சரி ஆகிய 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
நெருப்பு குழி
இதனிடையே இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கு தொடங்கி இருக்கிறது. நெருப்பு குழி என்ற இந்த டாஸ்க்கில் முத்துகுமரன் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுகிறார். 'நான் இந்த கேம்மில் இருந்து வெளியேறாமல் இருக்க அருணை இந்த கேம்மைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்' என கேம்மில் அருணின் புகைப்படத்தை எரிக்கிறார் முத்துகுமரன். நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருப்பதால் ஆட்டம் சூடுப்பிடித்திருக்கிறது. மேலும் இந்த புரோமோவில் ரயானுக்கு அடிப்பட்டுள்ளது.
85 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் மூன்று வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்