Bigg Boss Tamil Season 8 Finale Live: வெற்றிகரமாக முடிந்தது பிக் பாஸ் 8.. வெற்றியாளர் ஆனார் முத்துக்குமரன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil Season 8 Finale Live: வெற்றிகரமாக முடிந்தது பிக் பாஸ் 8.. வெற்றியாளர் ஆனார் முத்துக்குமரன்

Bigg Boss Tamil Season 8 Finale: முத்துக்குமரனா.. விஷாலா..? சடுகுடு ஆடும் சேது.. பிக்பாஸ் கோப்பையை வெல்லப்போவது யார்?

Bigg Boss Tamil Season 8 Finale Live: வெற்றிகரமாக முடிந்தது பிக் பாஸ் 8.. வெற்றியாளர் ஆனார் முத்துக்குமரன்

05:44 PM ISTJan 19, 2025 11:14 PM Kalyani Pandiyan S
  • Share on Facebook
05:44 PM IST

Bigg Boss Tamil Season 8 Finale Live: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 -ன் இறுதிப்போட்டி இன்று நடக்க இருக்கும் நிலையில், அப்போட்டி தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே பார்க்கலாம்.

Sun, 19 Jan 202505:44 PM IST

தாயாரிடம் கோப்பையை கொடுத்த முத்துக்குமரன்

பிக் பாஸ் 8 கோப்பையை பெற்ற முத்துக்குமரன், அதன் உடனடியாக தனது தாயாரிடம் கொடுத்தார்

Sun, 19 Jan 202505:42 PM IST

பிக் பாஸ் 8 வெற்றியாளர்

பிக் பாஸ் 8 வெற்றியாளர் ஆனார் முத்துக்குமரன்.  ரன்னர் அப் ஆனார் செளந்தர்யா

Sun, 19 Jan 202505:13 PM IST

மேடையில் எலிமினேட் ஆன விஜே விஷால்

பிக் பாஸ் பைனலிஸ்ட்களில் ஒருவரான விஷால் மேடையில் வைத்து எலிமினேட் செய்யப்பட்டார்.

Sun, 19 Jan 202504:36 PM IST

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு விருது

பிக் பாஸ் 8 சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. 

கேப்டன் ஆஃப் தி சீசன் விருது - தீபக் 
 

மாஸ்டர்ஸ் ஸ்டாடர்ஜிஸ்ட் விருது - ஆனந்தி

 

அட்டென்ஷன் சீக்கர் விருது - ராணவ்

 

டாஸ்க் ஸ்பெஷலிஸ்ட் - ரயான்

 

கேம் சேஞ்சர் விருது - ஜாக்குலின்

Sun, 19 Jan 202504:14 PM IST

தெறி ஆட்டம் போட்ட சுனிதா

பிக் பாஸ் 8 சீசனின் மூன்றாவது பெர்பார்மென்ஸாக சுனிதா தெறிக்கவிடும் ஆட்டம் போட்டுள்ளார். 

Sun, 19 Jan 202503:46 PM IST

வெளியேறிய பவித்ரா

பிக் பாஸ் 8 வீட்டில் எஞ்சியிருந்த நான்கு போட்டியாளர்களில் ஒருவராக பவித்ரா ஜனனி வெளியேற்றப்பட்டார். 

Sun, 19 Jan 202503:22 PM IST

டான்ஸ் பெர்பார்மென்சில் கலக்கிய அன்ஷிதா

தர்ஷிகாவை தொடர்ந்து இரண்டாவது டான்ஸ் பெர்பார்மென்ஸாக அன்ஷிதா நடனமாடினார். அமரன் படத்தின் மின்னலே ரீமிக்ஸ், புஷ்பா படத்தின் பீலிங்ஸ் போன்ற பாடல்களுக்கு அவர் நடனமாடினார்

Sun, 19 Jan 202503:12 PM IST

வெளியேற்றப்பட்ட ரயான்

பிக் பாஸ் 8 பைனலிஸ்களில் ஒருவராக இருந்தபோதிலும் கடைசி நாளில் பிக் பாஸால் வெளியேற்றப்பட்டார் ரயான்

Sun, 19 Jan 202502:39 PM IST

பேவரிட் இடங்களை காண்பித்த போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டிக்குள் விஜய் சேதுபதி நுழைந்த பைனலிஸ்ட்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தங்களது பேவரிட் ஸ்பாட்களை காண்பித்து அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்

Sun, 19 Jan 202502:20 PM IST

கண்ணாடி முன் அனுபவத்தை பகிரும் பைனலிஸ்ட்கள்

பிக் பாஸ் பைனலிஸ்ட்களான முத்துக்குமரன், செளந்தர்யா, பவித்ரா ஜனனி, ராயன், விஜே விஷால் ஆகியோர் தனிதனியாக கண்ணாடி முன் தோன்ற தங்களது அனுபவத்தை உணர்வு பூர்வமாக பகிர்ந்து கொண்டனர்

Sun, 19 Jan 202502:02 PM IST

இழு இழு இழுகதடி பாடலுக்கு நடனமாடிய தர்ஷிகா

காதலிக்க நேரமில்லை படத்தில் இடம்பிடித்த இழு இழு இழுக்குதடி, கட்சி சேர, மனசிலாயோ போன்ற ட்ரெண்டிங் பாடல்கள் அடங்கிய ப்யூஷன் இசைக்கு தர்ஷிகா நடனமாடியுள்ளார்

Sun, 19 Jan 202501:55 PM IST

ட்ரம்ஸ் வாசித்து பட்டையை கிளப்பிய விஷால்

பிக் பாஸ் 8 பைனலிஸ்ட்களை குஷிப்படுத்தும் விதமாக இசை குழுவினர்கள் அவர்களுக்காக பாடல் பாடி அசத்தினர். அப்போது  பைனலிஸ்டாக இருந்த ஐந்து பேரும் அவர்களின் பாடலுக்கு நடனமாடினர். 

தொடர்ந்து விஜே விஷால் சூப்பராக ட்ரம்ஸ் வாசித்து அசத்தினார்.

Sun, 19 Jan 202501:42 PM IST

பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்த போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் என்ன செய்தனர் என்பதையும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனுபவத்தையும் எமோஷனலாக பேசியுள்ளனர். 

Sun, 19 Jan 202512:42 PM IST

தனி ஆளாக வந்த ஜாக்குலின்

பிக் பாஸ் 8 போட்டியாளர்களில் பைனலிஸ்ட் தவிர இதர போட்டியாளர்கள் ஜோடியாக பல்வேறு விதமாந வாகனங்களில் என்ட்ரி கொடுத்தார்கள். ஆனால் இதில் ஜாக்குலின் மிஸ்ஸான நிலையில், அவர் சர்ப்ரைஸாக மேடைக்கு அழைத்தார் விஜய் சேதுபதி.

தனி ஆளாக மேடை ஏறிய ஜாக்குலினின் பிக் பாஸ் சீசன் 8 பயணம் திரையிடப்பட்டது 

Sun, 19 Jan 202512:38 PM IST

ரோஸ் நிற கோட் சூட்டில் விஜய் சேதுபதி 

வெற்றியாளர் யாருன்னு சொல்வதற்கான நேரம் வந்துவிட்டது  என கூறி மாஸாக என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, முழுக்க ரோஸ் நிறத்திலான கோட் சூட் அணிந்திருந்தார். 

Sun, 19 Jan 202512:36 PM IST

வேற லெவல் என்ட்ரி 

இந்த சீசனில் பங்கேற்ர 24 போட்டியாளர்களும் ஸ்கூட்டர், ஆட்டோ, சைக்கிள், வின்டேஜ் கார் என ஒவ்வொரு வாகனத்திலும் ஜோடி ஜோடியாக உள்ளே நுழைந்துள்ளனர்.

Sun, 19 Jan 202512:08 PM IST

ஜாக்குலினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி 

பிக் பாஸ் 8 இறுதிப்போட்டியில் கடைசியாக எதிர்பாராத விதமாக எவிக்ட் செய்யப்பட்ட ஜாக்குலின் பயண விடியோ ஒளிபரப்பான பின் பேசிய விஜய் சேதுபதி, உங்களை நேரடியாக பிக் பாஸ் தான் எவிக்ட் செய்தார். நானாக இருந்திருந்தால் உங்கள் பக்கம் இருந்திருப்பேன் என சொல்லி பலத்த கரகோஷங்கள் எழுந்துள்ளன. 

Sun, 19 Jan 202510:35 AM IST

காதல் கன்டெண்ட்களை அள்ளிக்கொடுத்த விஷால் 

பிக் பாஸ் 8 சீசனில் பெரிய அளவில் எந்த டாஸ்கும் செய்யாமல் பைனல் வரும் வந்திருக்கும் போட்டியாளராக விஷால் இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள். 

விஷால் பெயரை சொன்னாலே அவர் காதல் செய்தது தான் நினைவுக்கும் வரும் என கூறும் ரசிகர்கள், இந்த கன்டெண்ட் கொடுத்ததற்காகவே அவர் பைனலிஸ்டாக வந்திருக்கலாம் என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

கடைசி வாரத்தில் கூட அன்ஷிதாவும் நெருக்கம் காட்டி வந்துள்ளார் விஷால்

Sun, 19 Jan 202509:35 AM IST

மக்களின் வெற்றியாளர் செளந்தர்யா 

பிக் பாஸ் 8 சீசன் மக்களின் வெற்றியாளர் செளந்தர்யா தான் என செளந்தர்யா ஆர்மியினர் #PeopleWinnerSoundariya என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

இந்த சீசன் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் செளந்தர்யா வெளிப்படுத்திய தெறிக்கவிடும் சம்பவங்களை விடியோவாகவும் பகிர்ந்து வருகின்றனர்.
 

Sun, 19 Jan 202509:24 AM IST

விஜே விஷால் பிக்பாஸில் செய்தது என்ன?

பிக்பாஸ் வீட்டில் விஜே விஷால் கடந்து வந்த பாதை

Sun, 19 Jan 202508:38 AM IST

பிக்பாஸ் வீட்டில் ரயான்

பிக்பாஸ் வீட்டில் ரயான் கடந்து வந்த பாதை

Sun, 19 Jan 202508:28 AM IST

பவித்ரா கடந்து வந்த பாதை

பிக்பாஸ் வீட்டில் பவித்ரா கடந்த வந்த பாதை

Sun, 19 Jan 202508:07 AM IST

பிக்பாஸ் வீட்டின் ஸ்வீட் மெமரீஸ்..

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என பிக்பாஸ் போட்டியாளர்கள் சந்தோஷம் பொங்க இருந்த தருணங்கள் தான் இவை.

Sun, 19 Jan 202507:51 AM IST

ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டும் பிக்பாஸ் வீடு

இறுதி நாள் கொண்டாட்டத்தில் உற்சாகமாக நடனமாடும் போட்டியாளர்கள்

Sun, 19 Jan 202506:47 AM IST

செளந்தர்யாவின் பயணத்தை வெளியிட்ட விஜய் டிவி!

Sun, 19 Jan 202506:22 AM IST

ப்ராங்க்கால் உடைந்த பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டின் தொடக்க நாட்களில் ஆண்கள் அணியில் உள்ளவர்களால் ஒரு ப்ராங் நடத்தப்பட்டது. அந்த பிராங்க்கில் ரஞ்சித்தின் எலிமினேஷனுக்காக தான் இது செய்யப்படுகிறது என ரவீந்தர் சொல்லியும் அதை சரியாக கேட்காத போட்டியாளர்கள், வீட்டில் தனக்கான ஸ்கோர் செய்ய ரவீந்தர் பயன்படுத்தும் யுக்தி இது என கூறினர்.

இதன் விளைவாக ரவீந்தருக்கு ஆண்கள் அணி மேல் இருந்த நம்பிக்கை போனது. ரத்தமும் சதையுமாக இருந்த அணி அதன் பின் மெல்ல மெல்ல பல குழுக்களாக பிரயத் தொடங்கியது.

Sun, 19 Jan 202505:39 AM IST

முத்துக்குமரன் பேச்சு 

நான் வெளியே சென்றால் எனக்கு பதிலாக யார் பிக்பாஸ் வீட்டிற்குள் வரவேண்டும் என்றால் மஞ்சரிதான் வரவேண்டும் - முத்துக்குமரன் 

Sun, 19 Jan 202504:59 AM IST

பிக்பாஸ் செய்த தரமான சம்பவம்

பிக்பாஸ் வெளியிட்ட தரமான வீடியோ

Sun, 19 Jan 202504:18 AM IST

பிக்பாஸில் அதிகம் நடந்த உருவ கேலிகள்

பிக்பாஸ் சீசன் 8 தொடங்கிய அன்றே வீட்டிற்குள் வந்து பேசிய சௌந்தர்யாவை தர்ஷிகா பெண்மையா பேசச் சொல்லுங்க என அவரது குரலை கிண்டல் செய்தார். இதையடுத்து, ஜாக்குலினை சிலர் முட்டை போன்டா மூஞ்சி என்றெல்லாம் கிண்டல் செய்தனர்.

Sun, 19 Jan 202503:46 AM IST

வீட்டை பிரித்த பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்கள் என்ற பேதமே இல்லாமல் இத்தனை ஆண்டுகள் சென்ற நிலையில், இந்த ஆண்டு அது முழுவதுமாக உடைக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கைத் தவிர ஆண்கள் வீட்டின் பக்கம் பெண்களோ பெண்கள் வீட்டின் பக்கம் ஆண்களோ அனுமதி பெறாமல் வரக்கூடாது என புதுவிதி அறிமுகப்படுத்தப்பட்டது.

Sun, 19 Jan 202503:19 AM IST

24 மணி நேரத்தில் எலிமினேஷன்

Bigg Boss Highligts: இதுவரை இல்லாத வகையில் பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக போட்டியாளர்களில் இருந்து ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டு சாச்சனா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். பின் 3 நாட்களுக்குப் பின், யாரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Sun, 19 Jan 202503:16 AM IST

அதுவும், இதுவும் ஒன்னா? 

Sun, 19 Jan 202503:13 AM IST

தக் மொமண்ட்:  பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக அருண் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போது, அவரது ஆடையை ஆனந்தி ஒளித்து வைத்தார். 

Sun, 19 Jan 202502:40 AM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் 

Sun, 19 Jan 202502:18 AM IST

கோப்பையை வெல்பவருக்கு பரிசு எவ்வளவு? 

பிக்பாஸ் கோப்பையை வெல்பவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்படும்.

Sun, 19 Jan 202501:30 AM IST

பிக்பாஸ் வீட்டிற்குள் 5 பேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில், இறுதிபோட்டியாளர்களாக விஷால், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், செளந்தர்யா ஆகியோர் இருக்கின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்