அவர பத்தி உனக்கு என்ன தெரியும்? அருணிடம் சரமாரி கேள்வி கேட்ட தீபக் மனைவி .. பேச முடியாமல் தவித்த அருண்!
பிக்பாஸ் வீட்டில் தற்போது freezing task நடைபெற்று வருகிறது. இதில் தீபக் மனைவி மற்றும் மகன் இருவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளன. தீபக் மனைவி அருணிடம் சரமாரி கேள்வி கேட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது.
நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டில் தற்போது Freezing Task
பிக்பாஸ் வீட்டில் தற்போது freezing task நடைபெற்று வருகிறது. இதில் தீபக் மனைவி மற்றும் மகன் இருவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்துள்ளன. இதில் பிக்பாஸ் வீட்டில் தீபக் மனைவி வந்து அனைவரிடமும் பேசி கலகலப்பாக வைத்திருக்கிறார். அப்பொழுது திடீரென பிக்பாஸ் தீபக் மனைவியிடம் நான் கேட்ட கேள்வி என்ன ஆனது இன்னும் பதில் வரவில்லை எனக் கூற தற்போது சொல்கிறேன் என தீபக் மனைவி சொல்கிறார்.