‘நான் மொக்க மூஞ்சியா..? அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கல.. அவன் நடிகன்’ தர்ஷிகா ‘எமோஷன்’ பேட்டி!
VJ விஷால், என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னதை வெளியில் வந்து பார்த்தேன். அதே விஷால் என்னிடம், நான் அழகாக இருப்பதாக பலமுறை கூறியிருக்கிறான். என் முன்னால் பேசியதை நம்புவதாக, என் பின்னால் போய் பேசியதை நம்புவதா, எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியின் வலுவான போட்டியாளராக அறியப்பட்ட தர்ஷிகா, வெளியேற்றத்திற்கு பின் பல்வேறு தளங்களில் பேட்டி அளித்து வருகிறார். அந்த வகையில் IndiaGlitz Tamil யூடியூப் தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், VJ உடனான காதலால் தான் சந்தித்த சருக்கல் குறித்தும், தன் விளையாட்டின் பாதிப்பு குறித்தும் பேசியிருக்கிறார். இதோ அவருடைய அந்த பேட்டி:
‘‘பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின், நிறைய மனவலியாக இருக்கிறது. ரொம்பவே கஷ்டமா இருக்கிறது. நான் ஒரு ஸ்ட்ராங் போட்டியாளராக இருந்திருக்கிறேன். என்னை விளையாட்டில் அடிக்க முடியாது. அதேநேரத்தில் பாசத்தில் அடிக்க முடியும். பிக்பாஸ் வீட்டில் என்னுடைய பாசம், வேசமில்லை. வெளியே வந்த பிறகு தான், உள்ளே வேசம் நடந்தது எனக்கு தெரிந்தது. ஒரு நடிகையாக நான் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றேன், ஆனால், அங்கே என்னிடம் நடத்த சிறந்த நடிகராக VJ விஷாலை சொல்வேன்.
வீட்டுக்குள் இருந்த போது, பவித்ரா என்னிடம் சொன்னவற்றை நான் கேட்காமல் இல்லை. திரும்ப திரும்ப அதை யோசித்துக் கொண்டே தான் இருந்தேன். அதை உணர்ந்து, திருத்தி, விளையாட முயற்சிக்கும் போது வெளியே வந்துவிட்டேன். அந்த ஸ்கூல் டாஸ்க் இல்லை என்றால், கண்டிப்பாக நான் வீட்டில் இருந்திருப்பேன். எந்த காதல் கன்டண்ட்டுக்கும் சொல்லி அனுப்பப்பட்டது அல்ல. அதுவாக நடந்தது தான்.
என்னிடம் ஒன்று.. வெளியே ஒன்று
VJ விஷால், என்னை மொக்க மூஞ்சி என்று சொன்னதை வெளியில் வந்து பார்த்தேன். அதே விஷால் என்னிடம், நான் அழகாக இருப்பதாக பலமுறை கூறியிருக்கிறான். என் முன்னால் பேசியதை நம்புவதாக, என் பின்னால் போய் பேசியதை நம்புவதா, எது உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. எது நீ என்பதே எனக்கு தெரியவில்லை. அவர் சொல்வதால், நான் அப்படி ஆக மாட்டேன். அழகு முகத்தில் இல்லை, உள்ளே இருப்பதை நீ வெளிப்படுத்தும் விதத்தில் தான் அழகு இருக்கிறது.
எனக்கு காதல் லேசாக இருந்தது உண்மை தான். எனக்கு VJ விஷாலை பிடித்திருந்தது, நான் ஒத்துக்கொள்கிறேன். நான் போகும் போது, ‘உங்க பாசத்தை மதிக்கிறேன்’ என்று விஷால் சொன்னார். ஏன், அப்படி பேசினார் என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை. இதை உள்ளேயே சொல்லியிருக்கலாம். நாம் ஒருவரை ஏன் விரும்புகிறோம்? அவர்கள் நம்மை விரும்புவதை அறியும் போது தானே? அவர் விரும்பியதை நான் உள்ளே உணர்ந்தேன். அதனால் தான் நானும் அதை செய்தேன். ஆனால், இது அதற்கான இடம் இல்லை என்று நாங்கள் இருவருமே உள்ளே பேசியிருக்கிறோம். ஆனால், எங்களால் மறைத்து வைக்க முடியவில்லை.
அன்ஷிதாவுக்கும் எனக்கும் செட் ஆகாது
பிக்பாஸ் வீட்டில் எனக்கும், அன்ஷிதாவுக்கும் செட் ஆகாது என்பதை நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம். அவங்க ரொம்ப எமோஷனான பொண்ணு. நான் சென்ற பின், என் இடத்தை அவர் எடுத்துக் கொண்டதாக சொல்வதைப் பற்றி, எனக்கு ஒன்றும் தெரியவில்லை. பவித்ரா என்னிடம் கூறிய அறிவுரையை, VJ விஷால் கூட இருந்தவர்கள் யாராவது சொல்லியிருந்தால், நான் இன்னும் ஸ்ட்ராங்கா எடுத்திருப்பேன்.
வெளியே வந்த பின், வெற்றியாளராக நான் பார்ப்பது, தீபக் அல்லது முத்துக்குமரன். சவுந்தர்யா வெளியே எனக்கு ப்ரெண்ட் தான். வீட்டுக்குள் என்னால், அவளுடன் கனெக்ட் ஆக முடியவில்லை. அவள் ஒரு தனி உலகத்தில் இருந்தால். ஜாக்லின் ரொம்ப ஸ்ட்ராங். தொடர்ந்து நாமினேஷனில் இருந்தும், கொஞ்சம் கூட கலங்கவில்லை. இந்த விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என தெரிந்தவர்களில் ஜாக்லினும் ஒருவர். மற்றொருவர் மஞ்சரி. ஒரு டாஸ்கை எப்படி விளையாட வேண்டும் என நினைப்பவர் மஞ்சரி. டாப் 5ல் அவர் இருப்பார்.
ஜெப்ரியின் பாசத்தை நான் பொய் என்று சொல்ல மாட்டேன். நான் நடிக்கிறானா என்பதை, உள்ளே இருப்பதை வைத்து நான் சொல்ல முடியாது. ஆனால், அவன் விளையாடுவான், விளையாடத் தெரியும் என்பதே இந்த இரு வாரத்தில் தான் எனக்குத் தெரிகிறது. அருண், வாரத்தோறும் ஒரு அருணை பார்க்கிறோம். ஸ்மார்ட் ப்ளையர் அருண்.
டாபிக்ஸ்