‘என்னுடன் தங்குவார்கள்.. என்னை நேசிப்பார்கள்.. நேசிக்கிறேன்’ அன்ஷிதா வெளியிட்ட பதிவு!
‘அனைவருக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், என் வாழ்க்கையின் அனைத்து இழப்புகள், துயரங்கள் மற்றும் எதிர்மறைகள் இந்த புதிய ஆண்டுடன் மங்கிவிடும் என்று நான் நம்புகிறேன். ஒரு அற்புதமான ஆண்டுக்கான நம்பிக்கையுடன் நான் 2025ல் அடியெடுத்து வைக்கிறேன்’
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட அன்ஷிதா, வெளியே வந்ததும் தன் வீட்டாருடன் நேரத்தை செலவிட்டார். தன் சகோதரருடன் புகைப்படம் வெளியிட்டது. பீச் ஹவுஸ் போட்டோக்களை வெளியிட்ட அன்ஷிதா, சற்று நேரத்திற்கு முன், தனது போட்டி பற்றியும், தனக்கு கிடைத்த அனுபவம் பற்றியும், தன் ரசிகர்களுக்கு சில விசயங்களை பகிர்ந்து கொண்டார். இதோ அன்ஷிதா, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்ட தகவல்கள்:
புதிய ஆண்டு.. புதிய பயணம்..
‘‘இதுவரை என்னுடன் நின்ற அனைவருக்கும் மிக்க நன்றி. ✨கடினமான மற்றும் மெல்லிய🧿மூலம் என்னுடன் இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், என் வாழ்க்கையின் அனைத்து இழப்புகள், துயரங்கள் மற்றும் எதிர்மறைகள் இந்த புதிய ஆண்டுடன் மங்கிவிடும் என்று நான் நம்புகிறேன். ஒரு அற்புதமான ஆண்டுக்கான நம்பிக்கையுடன் நான் 2025✨இல் அடியெடுத்து வைக்கிறேன். என்னுடன் இருந்த ஒவ்வொருவரும் தொடர்ந்து தங்குவார்கள், என்னை ஆசீர்வதிப்பார்கள், என்னை நேசிப்பார்கள். துக்கத்திலிருந்து மகிழ்ச்சிக்கு✨என்னை வழிநடத்திய கடவுளுக்கு மனமார்ந்த நன்றி இது ஒரு புதிய ஆண்டு மற்றும் ஒரு புதிய பயணம்🧿✨நீங்கள் இப்போது ஒரு வித்தியாசமான அன்ஷிதாவைக் காண்பீர்கள், மகிழ்ச்சி, நேர்மறை மற்றும் நம்பிக்கை🤍🤗நிறைந்தது அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். 🤍🧿✨
நான் உங்கள் அனைவரையும்🥰 நேசிக்கிறேன்,’’
என்று அந்த இடுகையில் அன்ஷிதா கூறியுள்ளார்.
காதல் கிசுகிசுவில் சிக்கிய அன்ஷிதா
பிக்பாஸ் வீட்டில் வெளியேறும் வாரத்தில், VJ விஷால் உடன் காதல் வலையில் சிக்கியதாக கிசுகிசுக்கப்படுகிறார் அன்ஷிதா. ஏற்னகவ அர்னவ் விவகாரத்தில் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட அன்ஷிதா, அதன் பின், அவருடைய நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அறிவிக்காத நிலையில், தற்போது விஷாலுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.
போட்டிக்கு வெளியே வந்ததும் சில முடிவுகளை எடுக்கலாம் என ரகசியம் பேசிக் கொண்ட அவர்கள், அத்தோடு நிறுத்தாமல், அருணிடம் தனிமையில் விஷால் பற்றியும், அவர் தன்னை காதலிக்கிறாரா என்றும் உறுதிபடுத்துக் கொண்டார் அன்ஷிதா. ஏற்கனவே தர்ஷிகாவின் ஆட்டத்தை காதல் வலையில் விஷால் வீழ்த்தினார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அதே வலையில் அன்ஷிதாவும் காலியானார் என்கிற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.
இதற்கிடையில் தான், அன்ஷிதாவின் இன்றைய பதிவில், ‘புதிய ஆண்டு.. புதிய பயணம்’ போன்ற பூடக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது, இந்த விவகாரத்தை இன்னும் ஆழமாக ஆராய வைக்கிறது. சமீபத்திய எபிசோடில், அன்ஷிதா பற்றி கேமராவில் நலம் விசாரித்த விஷாலையும் பார்க்க முடிந்தது. இதெல்லாம் எங்கே போய் முடியும் என்பதை, கொஞ்சம் காத்திருந்த பார்க்கலாம்.
டாபிக்ஸ்