Bigg Boss Tamil: ஐஸூ எலிமினேட் ஆனதற்கு நிக்சன் காரணமில்லையா?.. ‘உங்கள சாருன்னு வேற கூப்பிடணுமா?’ - நிக்சனை வெளுத்த கமல்
ஐஸூ எலிமினேட் செய்யப்பட்ட விவகாரமும் சர்ச்சையை சந்தித்து இருக்கிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி பரபரவென சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பூர்ணிமா நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐஸூ வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாரத்தில் அக்ஷயா, விக்ரம், பூர்ணிமா, கானா பாலா ஆகியோரில் யாராவது ஒருவரை கமல்ஹாசன் வெளியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக, கானா பாலா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றைய எபிசோடில் கேப்டனாக மறுபடியும் தினேஷ் தேர்வான நிலையில், விசித்ராவும், அர்ச்சனாவும், உன்னைப்போல் ஒருவன் டாஸ்க்கில், சக போட்டியாளர்கள் திட்டமிட்டு எங்களை மோசமான ஃபெர்ஃபாமர் என்று முத்திரைகுத்தி, அடுத்த டாஸ்க்கில் பங்கேற்க விடாமல் செய்ததாக கூறினர். மேலும் இதனை காரணம் காட்டி, ஜெயிலுக்குள் செல்லாமல், விதிகளை மீறி வெளியே சென்று விட்டனர்.