Bigg Boss 7 Tamil: வாடி ராசாத்தி..ஏகபோக வரவேற்பு..மாயா கொடுத்த பிரியா விடை! - லட்சாதிபதியான பூர்ணிமா!
அவருக்கு அவரது குடும்பத்தினர் ஏகபோக வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாரென்று தெரிந்து விடும். இதற்கிடையே, பணப்பெட்டியை வைத்து போட்டியாளர்களை பிக்பாஸ் ஊஞ்சலாட விட்ட நிலையில், பூர்ணிமா பணப்பெட்டியில் பதினாறு லட்சம் வந்த உடன், அதனை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
அவருக்கு அவரது குடும்பத்தினர் ஏகபோக வரவேற்பு கொடுத்து இருக்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை, மாயாவும் பூர்ணிமாவும் ஆரம்பத்தில் இருந்து நண்பர்களாக தொடர்ந்து வந்தனர்.மாயா சூனியக்காரி, மோசமானவள் என விமர்சனங்கள் எழுந்த போதும் சரி, பூர்ணிமா அவ்வளவு ஒர்த் இல்லை என்று மக்கள் விமர்சனம் செய்த போதும் சரி, இருவரும் முடிந்த வரை ஒருவரையொருவர் பிரியாமல் பார்த்துக்கொண்டனர்.
குறிப்பாக, பூர்ணிமா துவண்டு விழும் போதெல்லாம், மாயா அவருடன் கை கோர்த்து நின்று ஆறுதல் படுத்தி இருக்கிறார். கடைசியாக, பணப்பெட்டியை கையில் எடுத்துக்கொடுத்து சந்தோஷமாக அனுப்பியும் வைத்தார். இந்த நிலையில் மாயா பூர்ணிமா நட்பு தொடர்பான வீடியோக்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.