தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss Tamil Season 7 Poornima Ravi Said Archana Is A Title Winner

Bigg Boss 7 Tamil: ‘நல்லா இருந்த என் மனச நாராக கிழிச்சிப்புட்ட’.. காதல் மொழி பேசிய பூர்ணிமா.. குத்துயிரான விஷ்ணு!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 05:04 PM IST

விசித்ராவை பார்த்து, நீங்கள் மட்டும் டைட்டில் வின்னர் ஆனால் செம இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்றார், மணியை பார்த்து உனக்கு முன்னதாக அந்த பணத்தை நான் எடுத்து வந்து விட்டேனோடா என்று கிண்டலடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி!
பிக்பாஸ் நிகழ்ச்சி!

ட்ரெண்டிங் செய்திகள்

 

இதனையடுத்து அவர் வீட்டிற்கு சென்ற போது அவருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. தொடர்ந்து நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்றும் அவர் மரியாதை செலுத்தினார். 

இந்த நிலையில் தற்போது பூர்ணிமா பிக்பாஸ் செட்டிற்கு மீண்டும் வந்திருக்கிறார். அது தொடர்பாக புரமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பூர்ணிமா உள்ளே வர, கமல் உங்கள் நண்பர்கள் பற்றி டைரக்ட் கமெண்ட் சொல்லுங்க என்று சொல்ல, மாயாவை பார்த்து வெறும் கையோடு நீ வெளியே வந்தால் உன்னை துரத்தி, துரத்தி அடிப்பேன் என்றார் பூர்ணிமா. 

விசித்ராவை பார்த்து, நீங்கள் மட்டும் டைட்டில் வின்னர் ஆனால் செம இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்றார், மணியை பார்த்து உனக்கு முன்னதாக அந்த பணத்தை நான் எடுத்து வந்து விட்டேனோடா என்று கிண்டலடித்தார். விஷ்ணுவை பார்த்து எதுவும் சொல்லாமல் சூப்பர் என்று சைகை மொழியில் சொன்னார். அர்ச்சனாவை பார்த்து டைட்டில் வின்னர் அர்ச்சு என்றார்.

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை, மாயாவும் பூர்ணிமாவும் ஆரம்பத்தில் இருந்து நண்பர்களாக தொடர்ந்து வந்தனர்.மாயா சூனியக்காரி, மோசமானவள் என விமர்சனங்கள் எழுந்த போதும் சரி, பூர்ணிமா அவ்வளவு ஒர்த் இல்லை என்று மக்கள் விமர்சனம் செய்த போதும் சரி, இருவரும் முடிந்த வரை ஒருவரையொருவர் பிரியாமல் பார்த்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.