Bigg boss 7 Tamil: ‘2 -வது வாரத்துல நோண்டினேன்தான்.. என்னோட கேம் என்னன்னு வெளியே வந்து’ - திடீரென எமோஷனல் ஆன மாயா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: ‘2 -வது வாரத்துல நோண்டினேன்தான்.. என்னோட கேம் என்னன்னு வெளியே வந்து’ - திடீரென எமோஷனல் ஆன மாயா!

Bigg boss 7 Tamil: ‘2 -வது வாரத்துல நோண்டினேன்தான்.. என்னோட கேம் என்னன்னு வெளியே வந்து’ - திடீரென எமோஷனல் ஆன மாயா!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 10, 2024 07:15 AM IST

நேற்று சக போட்டியாளர்கள் சொன்ன விஷயங்களை கேட்கும் போகும் உற்சாகமாக இருந்தது. நான் என்ன கேம் விளையாடினேன் என்பதை நான் வெளியே வந்து சொல்கிறேன்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 7
பிக்பாஸ் தமிழ் சீசன் 7

ஆகையால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மாறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாளான நேற்றைய தினம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எமோஷனலாக பேசினார்.

அவர் பேசும் போது, “ நேற்று சக போட்டியாளர்கள் சொன்ன விஷயங்களை கேட்கும் போகும் உற்சாகமாக இருந்தது. நான் என்ன கேம் விளையாடினேன் என்பதை நான் வெளியே வந்து சொல்கிறேன்.

ஆகையால், என்னைப் பற்றி தினேஷ் விஷ்ணு சொன்னதில் அவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பது தெரிந்தது. ஆனால் எனக்கு அது பிடித்திருந்தது. ஒருவரை தொட்டால், ஒன்பது பேரை தொடுவது போல என்று சொன்னதெல்லாம், மாஸ் படத்தின் ஹீரோவை குறிப்பிடுவது போல இருந்தது. நான் அதனை மிகவும் ரசித்தேன்.

ஆனால் நான் அதை எனக்கு செய்து கொள்ளவில்லை. அது எனக்கு தானாக அமைந்தது. விஜய் சொன்ன ஒன்றை நான் ஒத்துக்கொள்கிறேன். இரண்டாவது வாரத்தில் நான் எல்லோரையும் பிடித்து நோண்டினேன். அதை நான் ஒத்துக்கொள்கிறேன். வைல்டு கார்டு என்ட்ரியில் வீட்டிற்குள் புதிய போட்டியாளர்கள் வந்த உடனேயே கேம் மாறி விட்டது. 4 வாரங்கள் விளையாண்ட கேமே வேறு.

5 ம் வாரம் விளையாண்ட கேம் வேறு; ஆனால் எனக்கு  4 ம் வாரத்தில் நம்பிக்கை வந்து விட்டது. இந்த கேமை மிக மிக சந்தோஷமாக விளையாண்டேன். எதையும் திட்டமிடவில்லை. எல்லாம் தானாக அமைந்து விட்டது. 

என்னதான் இந்த நிகழ்ச்சியை பற்றி நாம் பேசினாலும், இறுதியாக இது மைண்ட் கேம். பிக்பாஸ் அதைத்தான் எதிர்பார்க்கிறது. ஆனால், அதனை எப்போது நிப்பாட்ட வேண்டும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இங்கு நான் என்னுடைய நண்பர்களை சம்பாதித்து இருக்கிறேன். இதெல்லாம் இன்னும் 3,4 நாட்களில் முடியப்போகிறது என்று நினைத்தால் ஒரு மாதிரி இருக்கிறது. என்னால் இதனை மறக்க முடியாது.” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.