BiggBoss Tamil Season 7 Grand Finale: இறுதிநாளில் எவிக்ட் ஆன இருவர் யார்?
பிக்பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலேயில் இருவர் எவிக்ட் ஆகியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சியில் இறுதிநாளில் இருவர் எவிக்ட் ஆகியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் 23 போட்டியாளர்கள் பங்கெடுத்தனர். 106 நாட்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் சரியாக 60 கேமராக்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பதிவுசெய்தது. அப்படி, போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9:30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்புவர். இதனை கோடிக்கணக்கான மக்கள் அனுதினமும் பார்த்தனர். அதனால் டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருக்கிறது.
இதில் இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மாயா, மணிசந்திரா ஆகியோர் உள்ளனர்.
சரியாக இன்று மாலை ஆறு மணிக்கு, விஜய் டிவியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தொடங்கியது. பிக்பாஸ் சீசன் தமிழ் 7 கிராண்ட் ஃபினாலே நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக கானா பாலா மற்றும் நிக்ஷன் ஆகியோர் இணைந்து முன்னாள் போட்டியாளர்கள் குறித்து பாடல் பாடினர். அப்போது பாடலுக்குரியவர்கள், கிராண்ட் ஃபினாலே மேடையில் தோன்றி டான்ஸ் ஆடினர்.
அப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ’கற்றதும் பெற்றதும்’ பற்றி பேசவேண்டும் என முன்னாள், இந்நாள் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். அவர்களும் அதைப் பேசினர். அதன்பின், கோக் ஸ்டூடியோ தமிழ் சீசன் 2 மியூசிக் பேண்ட்டை சார்ந்தவர்கள் பிக்பாஸ் இல்லத்துக்குள் வந்தனர். அதன்பின்,இறுதிப்போட்டியாளர்களுக்காக இசைவிருந்து நடத்தப்பட்டது. அப்போது அக்குழுவில் இருந்தவர்கள் இசையமைத்துப் பாடினர். அப்போது அங்கு பாட அழைக்கப்பட்ட மாயா, ’வா ரயில் விட போலாமா’ என்னும் பாடலைப்பாடினார். அதன் பின், அந்த மியூசிக் பேண்ட் விடைபெற்றது.
பின் பாட்காஸ்டில் இறுதிப்போட்டியாளர்கள், தாங்கள் பிக்பாஸுக்கு வந்ததன் நோக்கம் குறித்துப்பேசினர்.
பின் பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே மேடைக்கு வந்த பூர்ணிமா 'சாய்ச்சுட்டாளே, பெண்ணே பெண்ணே, மகுடி மகுடி’ ஆகியப் பாடல்களுக்கு நடனம் ஆடினார்.
பின்னர், பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார், கமல்ஹாசன். அப்போது பிக்பாஸ் வீட்டில் செய்த சாதனைகள் என்ன என இறுதிப்போட்டியாளர்களிடம் கேட்டார். அப்போது முதலில் பேசிய மாயா, நிறைய பவுன்ஸ் பேக் ஆவதில் சாதனைப் புரிந்துள்ளேன் என்றார். நிறைய தைரியம் ஆகியுள்ளேன் என்றார், அர்ச்சனா.
மிக நேர்மையாக இருந்து சாதனைபுரிந்தேன் என்றார், விஷ்ணு. டான்ஸராக இருந்ததில் இருந்து பிராப்பராக பேசக்கற்றுக்கொண்டேன் என்றார், மணி சந்திரா. நல்ல ஹோம் மேக்கராக மாறிவிட்டேன் என்றார், தினேஷ்.
அதன்பின் கமல்ஹாசன், பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் குறித்து இறுதிப்போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய மாயா, தான் இருந்த 100 நாட்களும் மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார். அப்போது தினேஷ், தனது கேப்டன்சி குறித்து பாஸிட்டிவ் கமெண்ட் வந்த நாள் தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார். பின், பேசிய மணி, தன்னை குறித்து வீடியோ வெளியிடும்போது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரிவித்தார். அதன்பின் அர்ச்சனா, தான், தன் தந்தை பிக்பாஸ் இல்லத்துக்குள் வந்த நாள் பிக்பாஸ் இல்லத்தில் மிக சந்தோஷப்பட்டதாக கூறினார். இறுதியாக, விஷ்ணு, பெரும்பாலான நாட்களில் ஜாலியாக இருந்ததாகக் கூறினார்.
அதன்பின், கமல்ஹாசன் இறுதிப்போட்டியாளர்களுக்கு புத்தகங்களையும் வீடு போன்ற மாதிரியையும் பரிசளித்தார்.
பின் யாஞ்சி யாஞ்சி என்னும் பாடலுக்கு அனன்யா டான்ஸ் ஆடினார். அதன்பின் யெம்மா யெம்மா என்ன கொல்லுறாளே என எண்ட்ரி கொடுத்தார், விஜய் வர்மா. பின் இருவரும் ‘நான் பிழை, நீ மழலை’ என்னும் மெலடிக்கு ஜோடி சேர்ந்து ஆடினர்.
கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:
அப்போது விழா மேடையில் தோன்றிய கமல்ஹாசனிடம், கூல் சுரேஷ், கானா பாலா, விசித்ரா என முன்னாள் போட்டியாளர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். அப்போது கூல் சுரேஷ், இவ்வளவுநாள் கலையுலகில் நீடிக்க தாங்கள் என்ன யுக்தியைக் கையாண்டீர்கள் என கமல்ஹாசனிடம் கேட்டார். அப்போது பட்டென பேசிய கமல்ஹாசன், ‘பொறுத்துக்கொண்டு இருந்தால் நீடிக்கலாம்’ என்றார். அதேபோல் சிலர் கேட்ட கேள்விகளுக்கு கமல்ஹாசன் அளித்த சுவாரஸ்யமான பதில்கள் இதுதான். அதாவது, கைதட்டல் தான் தன்னை இயங்க வைத்ததாகவும்; மிகச்சரியான விமர்சனங்களை எடுத்துக்கொள்வேன் என்றும்; மற்றவற்றை விட்டுவிடுவேன் என்றும் கூறினார். மேலும், தமிழ் மக்களின் விருந்தோம்பல் குணம் தனக்குப் பிடிக்கும் என்றார், கமல்ஹாசன்.
தான் மிகப்பெரிய சினிமா ரசிகன்; தன்னை ரசிப்பவர்களும் நல்ல ஒரு சினிமா ரசிகராக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் என்றார், கமல்ஹாசன். அப்போது ‘தக் லைஃப்’என தங்களின் படத்திற்குப் பெயர் சூட்டதுபற்றி விளக்கமுடியுமா என்றார், பூர்ணிமா. நியாயத்துக்காக காணாமல் அடிக்கப்பட்ட கொலை மற்றும் கொள்ளை செய்யப்பட்ட குழுவினர் ‘தக் லைஃப்’ என்றும்; சாமர்த்தியமாகப் பதிலளிப்பவர், ‘தக்’ என்றும் தற்போது பலர் கூறுவதாக கமல்ஹாசன் கூறினார்.
அடுத்து ரவீனா, அரேபிக் கடலோரம் ஒரு அழகைக் கண்டேனே உட்பட சில மிக்ஸிங் பாடல்களுக்கு நடனம் ஆடினார்.
கமல் படம் குறித்த அறிவிப்பு:
அடுத்து சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பு, அறிவு ஆகியோர் இணைந்து, கமல்ஹாசனின் 237ஆவது படத்தை இயக்குகின்றனர் என்ற அறிவிப்பு வெளியானது.
அதன்பின் பிக்பாஸ் இல்லத்தில் பேப்பர் மழை பொழிந்தது. அதில் இருக்கும் ஒரு நபர் எவிக்ட் செய்யப்பட்டதாக பிக்பாஸால் அறிவிக்கப்பட்டார். அப்போது, அந்த பேப்பர்களை அனைத்து இறுதிப் போட்டியாளர்களும் ஆர்வமுடன் தேடிப் படித்தனர். அதில் விஷ்ணுவின் பெயர் இடம்பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து அவர் எவிக்ட் ஆனார்.
இந்தப் போகிப் பண்டிகையில் எதை விட்டுவிடலாம் என்ற கேள்வியை தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி என்ற நால்வரிடமும் வைத்தார், கமல்ஹாசன். அவர்கள் தங்கள் பதில்களை முன்வைத்தனர்.
9 பேருக்கு உப விருது:
அதனைத்தொடர்ந்து 23 போட்டியாளர்களில், 9 பேருக்கு பட்டம், பிக்பாஸ் டெக்னீசியனின் பரிந்துரையின்கீழ் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டங்கள், யார் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறித்துப் பார்ப்போம்.
கேம் சேஞ்சர் பட்டம் தினேஷுக்கு கொடுக்கப்பட்டது. ஸ்போர்டிவ் பட்டம் மணிசந்திராவுக்கு கொடுக்கப்பட்டது. டிடெர்மைன் பங்கேற்பாளராக பூர்ணிமாவுக்கு விருது கொடுக்கப்பட்டது. செல்ஃப் மேட் போட்டியாளர் விருது நிக்சனுக்கு வழங்கப்பட்டது. ரைஸிங் ஸ்டார் பட்டம் அர்ச்சனாவுக்கு தரப்பட்டது. இன்ஸ்பிரேஷனல் போட்டியாளர் விருது விசித்ராவுக்கு வழங்கப்பட்டது. அதன்பின், காம்பெட்டிடிவ் பங்கேற்பாளர் விருது விஷ்ணுவுக்கு தரப்பட்டது. வெர்ஷடைலிட்டி விருது மாயாவுக்கு கொடுக்கப்பட்டது. எனர்ஜிடிக் போட்டியாளர் விருது ரவீனாவுக்கு தரப்பட்டது.
அதன்பின், தினேஷ் எவிக்ட் ஆனதாக அறிவிக்கப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9