Bigg Boss Tamil Season 7 Grand Finale: பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா!
Biggboss Title Winner Archana: பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார்.
Bigg Boss Tamil Season 7 Grand Finale: தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு ரவுண்டில் உள்ளே வந்து,பிக்பாஸ் சீசன் 7 தமிழுக்கான டைட்டிலை வென்ற முதல் போட்டியாளரானார், அர்ச்சனா.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் கிட்டத்தட்ட அதன் கிளைமாக்ஸை நெருங்கியது. ஏற்கனவே எலிமினேட்டாகி வெளியே சென்ற பலரும் இந்த வாரம் வீட்டிற்குள் வந்து தங்களதும முன்னாள் போட்டியாளர்களுடன் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு, பிக்பாஸின் ஆணைக்கிணங்க வெளியில் புறப்பட்டனர்.
இந்நிலையில் மணி, அர்ச்சனா, தினேஷ், மாயா, விஷ்ணு ஆகியோர் இறுதியாக பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். இவர்களுக்கு இடையே போட்டி கடுமையாக இருந்தது. வாக்கு பங்களிப்பும் கடுமையாக இருந்தது.
இந்நிலையில் ஜனவரி 13ஆம் தேதி அதற்குண்டான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அதில் அர்ச்சனா அதிக வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் சீசன் 7 தமிழின் டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வைல்டு கார்டு ரவுண்டில் வந்து முதன்முதலாக, தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் முதன்முறையாக டைட்டில் வின்னர் ஆனது இதுவே முதல்முறை. இதற்குண்டான அறிவிப்பு நிகழ்ச்சி ஜனவரி 14 மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.