Bigg Boss Archana: ‘அறுபதாம் கல்யாணத்தையே அருணும் அர்ச்சனாவுதான் பண்ணி வச்சாங்கா..’ - அருண் அப்பா பேட்டி
Bigg Boss Archana: அருணும், அர்ச்சனாவும் ஒருமுறை கூட எங்களிடம் அனுமதியோ அல்லது தாங்கள் காதலிப்பது தொடர்பான தகவலையோ கூறியது இல்லை. - அருண் அப்பா பேட்டி!

Bigg Boss Archana: அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அருண், அங்கு நடிகையும் முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவை காதலிப்பதாக கூறினார். தொடர்ந்து அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளும் கொண்டு வந்து ரிலேஷன்ஷிப்பை உறுதிபடுத்தினார்.
ஓப்பனாக பேசிய அப்பா
தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அவர்,அர்ச்சனாவுடம் இணைந்து பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அந்த வரிசையில் அவர் தனது குடும்பம் மற்றும் அர்ச்சனாவுடன் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்து இருக்கிறார். அந்தப்பேட்டியில் அருணின் அப்பா அர்ச்சனா - அருண் காதல் குறித்து பேசி இருக்கிறார்.
பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னதே கிடையாது
அவர் பேசும் போது, ‘இந்த நிமிடம் வரை அருண் எங்களிடம் வந்து நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னதே கிடையாது. அருணும், அர்ச்சனாவும் ஒருமுறை கூட எங்களிடம் அனுமதியோ அல்லது தாங்கள் காதலிப்பது தொடர்பான தகவலையோ கூறியது இல்லை.
ஆனால், எங்களுக்கு இந்த விஷயம் இலைமறைக்காயாக தெரியும். அருணுக்கு ஒரு பெண்ணை பிடிக்கிறது என்றால், நிச்சயமாக நாங்கள் அதற்கு ஓகே என்று தான் கூறுவோம். உண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவை காதலிப்பதை இவன் சொன்ன பின்னர்தான் எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக விஷயம் தெரியும்.
எங்களுக்கு மிகவும் நெருக்கமானவள்.
அர்ச்சனா எங்களுக்கு மிகவும் நெருக்கமானவள். அர்ச்சனா எங்கள் வீட்டிற்கு பல வாரங்களாக பல மாதங்களாக வந்து சென்றிருக்கிறாள். அதனால், எங்களுக்கு முன்னமே இது பற்றி தெரியும். அவர்கள் காதலிக்கிறார்கள் என்ற விஷயம் எங்களுக்கு தெரிந்த மிகவும் பழைய விஷயம்; புதிதாக எல்லாம் எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை.
எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் நடந்தது. மிகவும் சிம்பிளாகத்தான் வடபழனி கோயிலில் வைத்து அதனைச் செய்தோம். அதனை அர்ச்சனாவும், அருணும் மட்டும்தான் செய்து வைத்தார்கள். அவர்கள் தான் எங்களுக்கு கல்யாணத்தை செய்து வைத்தார்கள்
நானும் என்னுடைய மனைவி மாலாவும் அருணிடம் ஒரு சின்ன விஷயத்தை கூட மறைத்தது கிடையாது; அந்த அளவுக்கு வெளிப்படையாக நாங்கள் இருப்போம். ஆனால் அருண் அர்ச்சனாவை காதலிப்பதை எங்களிடம் சொல்லவே இல்லை.’ என்று அதில் (ரெட் நூல்சேனல்) அவர் பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்