Muthukumaran: ‘அவ்வளவு கனமா இருக்கு.. எனக்கு இவ்வளவு அன்பா.. மலைச்சு போயி நிற்கிறேன்.. விடை தெரியவில்லை’- முத்துக்குமரன்
Muthukumaran: அவ்வளவு கனமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நண்பர்கள் உங்களுக்கு வெளியே அவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறினார்கள். - முத்துக்குமரன் நெகிழ்ச்சி!
பிக்பாஸ் தமிழ் 8 ஆவது சீசனின் வின்னராக முத்துக்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் தன்னை வின்னராக தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி கூறும் வகையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், ‘நன்றி மறப்பது நன்றன்று. இது இந்த காணொளிக்காகவோ அல்லது இந்த கணத்திற்காகவோ இல்லை... நான் இதை காலத்திற்கும் நினைவு வைத்திருப்பேன். எல்லோரும் சேர்ந்து இதை என் கையில் தூக்கிக் கொடுத்திருக்கிறீர்கள்.
அவ்வளவு அன்பு
அவ்வளவு கனமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நண்பர்கள் உங்களுக்கு வெளியே அவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கிறது என்று கூறினார்கள்.
ஆனால் வெளியே வந்த பின்னர் தான் தெரிந்தது, எனக்கு இவ்வளவு அன்பு கிடைத்திருக்கிறது என்று.. எனக்கா இவ்வளவு அன்பு என்று மலைத்துப்போய் நிற்கிறேன். பேசவே முடியவில்லை. இதற்கு எப்படி நன்றி சொல்லலாம் என்று யோசித்து பார்த்தால், அதற்கான விடை எனக்கு தெரியவில்லை.
பிக்பாஸில் இந்தக் கோப்பையை என்னிடம் கொடுத்து இதனிடம் என்ன பேச விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது சொன்னதைத்தான் நான் இப்போதும் சொல்ல விரும்புகிறேன்
பிக்பாஸ் சீசன் 8
அதுதான் நான் என்னுடைய நன்றியை சொல்லும் விதத்திற்கு சரி என்று நினைக்கிறேன். இந்த கோப்பை என்னுடைய நேர்மையாலும் என்னுடைய உண்மையாலும், நான் நானாக இருப்பதாலும், காப்பாற்றிக் கொள்வேன் இது என்னுடைய உழைப்பின் மேல் சத்தியம்ல் நெஞ்சம் நிறைந்த நன்றி உங்கள் எல்லோருக்கும்’ என்று பேசினார்.
முன்னதாக, விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 தனது இறுதிப் போட்டியுடன் ஞாயிறு (19 ஜனவரி 2025)அன்று நிறைவு பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசன், 2024 அக்டோபரில் "ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" தொடங்கியது.
24 போட்டியாளர்கள் இடையே தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், வாரந்தோறும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடுமையான போட்டிகளுக்கு பிறகு, முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, விஷால் மற்றும் ரயான் ஆகியோர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி, விஜய் டிவி சேனல் தலைவர் ஆர். பாலச்சந்திரன் மற்றும் கிளஸ்டர் ஜியோ ஸ்டார் தலைவர் கிருஷ்ணன் குட்டியுடன் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 8 தலைப்பு வெற்றியாளராக முத்துக்குமரனை அறிவித்தார். முத்துக்குமான் பிக்பாஸ் வின்னர் என்ற டைட்டிலுடன் 40,50,000 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்று, கோடிக்கணக்கான மக்களின் மனதையும் வென்றார். சௌந்தர்யா இந்த சீசனின் முதல் ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்