வா தல வா தல… அடித்து நொறுக்கிய நண்பர்கள்.. ஆரத்தி எடுத்து அழகு பார்த்த குடும்பம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெஃப்ரி - வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெஃப்ரியை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாகமாக வரவேற்று இருக்கின்றனர்.
![வா தல வா தல… அடித்து நொறுக்கிய நண்பர்கள்.. ஆரத்தி எடுத்து அழகு பார்த்த குடும்பம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெஃப்ரி - வீடியோ வா தல வா தல… அடித்து நொறுக்கிய நண்பர்கள்.. ஆரத்தி எடுத்து அழகு பார்த்த குடும்பம்.. மாஸ் என்ட்ரி கொடுத்த ஜெஃப்ரி - வீடியோ](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/29/550x309/jefry_1735485917963_1735485924950.jpg)
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க் நடந்தது. முதல் மூன்று நாட்களில் போட்டியாளர்களின் குடும்பத்தினரும், அடுத்த நாள் நண்பர்களும் வந்தனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மொத்தமாக பாச மழையில் நனைந்து ததும்பியது.
80 நாட்களை கடந்த பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 ஆவது நாளை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக அன்ஷிதாவும், ஜெஃப்ரி எலிமினேட் டபுள் எவிக்ஷன் முறையில் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். அர்னவ் விவகாரத்தில் சிக்கி பெயரைக்கெடுத்துக்கொண்ட அன்ஷிதா, அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார். அது ஓரளவுக்கு நிறைவேறிவிட்டது என்றே சொல்லலாம்.
ஜெஃப்ரி முடிந்த வரை நேர்மையாக விளையாடி மக்களின் அன்பை சம்பாதித்து இருக்கிறார். இந்த நிலையில் ஜெஃப்ரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வருகிறார் என்பதை தெரிந்து கொண்ட அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஏகோபித்த வரவேற்பை அவருக்கு அளித்து இருக்கின்றனர். அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் வெள்ளைக்காரில் வந்து இறங்கிய ஜெஃப்ரியை ஆரத்தி எடுத்து, தாரை தப்பட்டை அடித்து நண்பர்களும், உறவினர்களும் வரவேற்கின்றனர். இந்த சீசனில் பணப்பெட்டியை எடுக்கும் முனைப்போடு இருந்த ஜெஃப்ரி அந்த வாய்ப்பை தவறவிட்டு இருக்கிறார். இருந்த போதும், அவருக்கு 8 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்