Tamil News  /  Entertainment  /  Bigg Boss Tamil 7 Poornima Walks Out With 16 Lakh Rupees

Bigg Boss Tamil 7: உயிர் தோழிக்கு பணப்பெட்டியை எடுத்து கொடுத்து அனுப்பிய மாயா

Aarthi V HT Tamil
Jan 05, 2024 10:00 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.16 லட்சம் எடுத்து கொண்டு பூர்ணிமா வெளியேறி இருக்கிறார்.

பூர்ணிமா
பூர்ணிமா

ட்ரெண்டிங் செய்திகள்

பிக் பாஸ் தமிழ் 7 சமீபத்தில் இரட்டை எலிமினேஷனைக் கண்டது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிக்சன் மற்றும் ரவீனா தாஹா வெளியேற்றப்பட்டனர்.

புத்தாண்டில் 14 ஆவது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கியுள்ளதால், இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் 7 இன் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டை வென்ற விஷ்ணுவைத் தவிர அனைத்து போட்டியாளர்களும் எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.

நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் வழக்கம் போல் பணப்பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக யாருமே பணப்பெட்டியை எடுக்காத நிலையில் பிக் பாஸ் தொகையை உயர்த்தி கொண்டே இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.16 லட்சம் எடுத்து கொண்டு பூர்ணிமா வெளியேறி இருக்கிறார். தான் எடுத்து செல்லும் முடிவில் இருப்பதாக ஏற்கனவே பூர்ணிமா, மாயவிடம் ஆலோசனை செய்து வந்தார். 

 இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. உடனே மாயா பெட்டியை முடி தன் உயிர் தோழியான பூர்ணிமாவிடம் கொடுக்கிறார். பணப் பெட்டியை எடுத்ததும் நான் உங்களை அட்டாக் செய்ததற்கு ஐ ஆம் சோ சாரி என சொல்லி சாஷ்டாங்கமாக விழுந்து ஹவுஸ்மேட்ஸிடம் பூர்ணிமா மன்னிப்பு கேட்டார். காசு மேல காசு வந்து பாடல் ஒலித்தவுடன் அனைவரும் நடனமாடி பூர்ணிமாவை வழி அனுப்பி வைத்தனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.