Bigg Boss Tamil 6: அசீமை ஆதரிக்கவும் விக்ரமனை எதிர்க்கவும் இதுதான் காரணம்-நவீன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Tamil 6: அசீமை ஆதரிக்கவும் விக்ரமனை எதிர்க்கவும் இதுதான் காரணம்-நவீன்

Bigg Boss Tamil 6: அசீமை ஆதரிக்கவும் விக்ரமனை எதிர்க்கவும் இதுதான் காரணம்-நவீன்

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 25, 2023 02:39 PM IST

அனைவரும் அரசியல்மயமாக வேண்டும் என்று தனக்கு கிடைக்கும் இரண்டு நாட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தும் @ikamalhaasan சாருக்கு நன்றி என்று நவீன் தெரிவித்துள்ளார்

கோப்புபடம்
கோப்புபடம் (Bigg Boss Truth (Facebook))

இந்நிலையில் வெற்றி பெற்ற அசீம் வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில், "எம் மக்களுக்கு வணக்கம். பல்வேறு தளங்களில் உங்கள் ஆதரவு வருவதைக் கண்டு நான் திகைத்து நிற்கின்றேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மக்களே. எம் மக்களை உயிர் உள்ளவரை நான் மறவேன். நான் பெற்ற அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. நான் உறுதியளித்தபடி, எனது வெற்றித் தொகையில் 25,00,000 லட்சம் ரூபாய்யை கோவிட்-19 காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்காக கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று இயக்குநர் நவீன் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார். அதில்

நவீன்
நவீன் (@NaveenFilmmaker (Twitter))

‘தான் ஒரு திமுக official spokesman என்று சொல்லும் சகோதரர் அசீமை, திமுகவினர் பலர் எதிர்க்கின்றனர். காலம் முழுதும் திமுக கலைஞர் எதிப்பு பேசும் கட்சியினர் ஆதரிக்கின்றனர். இது அசீம் ஆதரவு எதிர்ப்பு என்பதைவிட @RVikraman பேசும் சித்தாந்தத்திற்கான ஆதரவு எதிப்பாகவே நான் பார்க்கிறேன்.

தீவிர இந்துத்துவம் பேசுவோர் கூட இந்து பெயர் கொண்ட @RVikraman தோல்வியையும், இஸ்லாமியரான அசீம் வெற்றியையும் கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர் பலர் அசீமை எதிர்க்கின்றனர். இதுதான் தமிழ்நாடு. இங்கு எக்காலத்திலும் மதம் பிரச்சனையல்ல. சமூகநீதிக்கான எதிர்ப்பும் ஆதரவும்தான் தமிழ்நாட்டு அரசியல்

106 நாட்கள் @RVikraman பேசிய சமத்துவ கருத்துகளை ஆதரித்து ஊக்குவித்து, புத்தக பரிந்துரைகள் செய்து, அனைவரும் அரசியல்மயமாக வேண்டும் என்று தனக்கு கிடைக்கும் இரண்டு நாட்களை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தும் @ikamalhaasan சாருக்கு நன்றிகள். இவ்வாறு தனது பதிவில் இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.